சசிகலா புஷ்பா கணவர் மீது கொலைவெறித் தாக்குதல்: அதிமுக அலுவலகத்தில் ரத்தக் களறி

சென்னை:
டிச.29 நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் காலியாக உள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவுடன் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு விருப்ப மனுவுடன் வந்தனர்.

இவர்கள் வரும் தகவல் காலை முதலே தீயாக பரவியதால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிக்கப்பட்டனர். விருகை வி.ன். ரவி , ஈரோடு சிந்து ரவிச்சந்திரன் , மகளிர் அணி வேளாங்கன்னி தலைமையில் ஆட்கள் குவிக்கப்பட்டனர். சசிகலாவின் கணவர் திலகர் உள்ளே நுழைந்தவுடனே அவனை கொல்லுடா , வெட்டுடா என்ற கோஷத்துடன் சரமாரியாக தாக்கினர். கீழே விழுந்த அவரை மிதி மிதி என்று மிதித்தனர்.
தனி நபராக மாட்டிக் கொண்ட திலகரின் மூக்கு வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. அடி வாங்குவது சசிகலாவின் கணவர் என முதலில் யாருக்கும் தெரியவில்லை. தர்ம அடி வாங்கி கொண்டிருந்த திலகரை அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் காப்பாற்றி அழைத்து சென்றனர்.
சசிகலா புஷ்பா அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சசிகலா புஷ்பா தரப்பினர் இதைத் தான் விரும்பி இருக்கலாம் என்றும், மனு தாக்கல் செய்ய விடாமல் வன்முறையில் ஈடுபட்டதால், பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை கேட்டு நீதிமன்றத்தை நாடக் கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.