திமுக., பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிக.,வினர் இன்று முற்றுகையிட முயற்சி செய்தனர்.
காட்பாடியில் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தேமுதிகவினர் முயற்சி மேற்கொண்டனர். மேலும், திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு எதிராக தேமுகவினர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, தேமுதிகவின் கூட்டணி அணுகுமுறை பற்றி துரைமுருகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், இரு கட்சிகளுடனும் மாறி மாறிப் பேசி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார் துரைமுருகன். மேலும் தேமுதிக.,வினர் தெளிவு இல்லாமல் இருப்பதாகவும், ஏதாவது ஒரு முடிவு எடுத்துவிட்டு வாருங்கள் என்றும் கூறினார். இதை அடுத்து தேமுதிக., திமுக., இரு தரப்பிலும் வார்த்தைப் போர் பலமாக எழுந்துள்ளது. #DMDK #DMK