உடல் வலி… உள்ளக் குமுறல்..! வேதனையின் விளிம்பு – பிரக்யா சிங் தாக்குர்!

காமுகனை வீழ்த்த வரும் காவித் தியாகி- சாத்வி பிரக்யா சிங் தாக்குர்!

சாத்வி பிரக்யா மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் தொகுதியில் திக் விஜய் சிங்கை
எதிர்த்து போட்டியிடுகிறார். பிஜேபி தன்னுடைய எதிரியான காங்கிரஸ் கட்சியை எப்படி எல்லாம் கவுண்டர் செய்கிறது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் சாத்வி பிரக்யா தாகூரை மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் தொகுதியில் போட்டியிட வைப்பதன் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் மத்திய பிரதேசம் முழுவதும் காவி அலை வீசுப்போவதால் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் போபால் இந்தூர் குணா ஆகிய லோக்சபா தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும். அது மட்டுமல்ல இந்துத்வா என்கிற சிந்தனைக்காக நீங்கள் கட்டப்பட்டு இருந்தால் இந்துத்வா அரசியல் உங்களை பாதுகாக்கும் என்று ப்ரக்யா தாகூரை போபாலில் போட்டியிட பிஜேபி சீட் கொடுத்ததன் மூலமாக இந்துத்வா சிந்தனையாளர்களுக்கு பிஜேபி உணர்த்தியுள்ளது.

இந்துத்வா அரசியல் என்பது ஒரு சிந்தனை சார்ந்த அரசியல் மட்டும் அல்ல. அது ரத்தத்தோடு கலந்த வரும் உணர்வு . அந்த உணர்வை கொச்சைப் படுத்தி காவி தீவிரவாதம் என்று பட்டம் சூட்டிய காங்கிரஸ் கூட்டத்தைவேறடி மண்ணோடு வீழ்த்தும் வரை எங்களின்உணர்வுகள் அடங்காது!

மத்திய பிரதேசத்தில் போபாலில் பிறந்து தன்னுடைய 14 ஆம் வயதில் துறவறம் பூண்ட பிரக்யா தாகூர் மாலேகான் குண்டு வெடிப்பில் கையாலாகாத காங்கிரஸ் ஆட்சியில் பச்சை தீவிரவாதத்தின் நிறத்தை காவி தீவிரமாக கலர் மாற்றி தங்களின் அரசியல் வாழ்வுக்கு பயன்படுத்தி கொண்டார்கள் சோனியா கூட்டத்தினர்.

2008ல் சிறைக்கு சென்ற பிரக்யா சுமார் 10 வருடம் சிறையில் இருந்துள்ளார். இதில் காமெடி என்னவென்றால் மாலேகான் குண்டு வெடிப்பில் முதலில் கைதான சிமி இயக்கத்தின் தீவிரவா திகளுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று கூறி
இதில் இந்து தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று வழக்கை திசை மாற்றியவர் ஹேமந்த் கர்கரே.

இந்து தீவிரவாதம் என்று கூறி சாத்வி பிரக்யா மற்றும் ராணுவ அதிகாரி புரோகித்தையும் குற்றவாளி களாக்கி தன்னுடைய எஜமான் காங்கிரஸ் கட்சியிடம் விசுவாசமாக நடந்து கொண்ட மகாரா ஸ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே பிறகு அதே பச்சை தீவிரவாதத்தினால் கொல்லப் பட்டதை விதி என்பதா? இல்லை இறைவனின் தண்டனை என்பதா?

சாத்வி ப்ரக்யாவின் உடல் நிலையை முன் வை த்து சிகிச்சைக்காக ஜாமீன் கேட்டு கோர்ட்டு கோர்ட்டாக அலைய விட்ட சிதம்பரம் இன்று தனக்கும் தன்னுடைய மகனுக்கும் கோர்ட்டு கோர்ட்டாக படியேறி முன் ஜாமீன் வாங்கி கொண்டு இருப்பதை விதி என்பதா இல்லை கடவுளின் தண்டனை என்பதா?

சுதந்திர இந்தியாவில் இந்துக்களை காவி தீவிரவாதிகள் என்று உள்துறை மந்திரியாக இருந்து கேவலப்படுத்திய ஒரே ஆள் திருடன் சிதம்பரம் தான். அதாவது தீவிரவாதத்திற்கு வர்ணம் பூசிய கோமாளி சிதம்பரத்தின் மகன் இன்று அதே
காவிப் படையால் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட இருக்கிறார்.

அதே மாதிரி மத்திய பிரதேசத்தில் பிறந்து விஷ்வ ஹிந்து பரிஷத்தில் பணியாற்றி தீவிரமாக இந்து த்வா அரசியலில் ஈடுபட்டு வந்த சாத்வி பிரக்யா தாகூரை அரசியல் வன்மம் காரணமாக மகராஷ்டிராவில் நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பி ல் சம்பந்தப்பட்ட வர்கள் இந்துதீவிரவாதகள் என்று கூறி பிரக்யா ஜெயிலுக்கு போகக் காரணமாக இருந்தவர் முன்னாள் மத்திய பிரதேச முதல் அமைச்சர் திக் விஜய் சிங்.

ஆனால் இப்பொழுது பாருங்கள் மாலேகான் குண்டு வெடிப்பில் எந்த வித குற்றமும் இன்றி. சாத்வி பிரக்யா விடுதலையாகி வெளிவந்துள்ளார். அது மட்டுமல்ல அவர் ஜெயிலுக்கு போகக் காரணமாக இருந்த திக்விஜய் சிங்கை எதிர்த்து போபாலில் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்  கட்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காத நிலையே இருப்பதால் ப்ரக்யாவின் போட்டி ஒட்டு மொத்த மத்திய பிரதேசத்தில் உள்ள 28 தொகுதிகள் இராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகள் மற்றும் மகாராஸ்டிரா வில் உள்ள 48 தொகுதிகள் என்று இந்துத்வா பெல்டில் உள்ள மாநில
ங்கள் அனைத்திலும் சாத்வி பிரக்யாவின் போட்டி கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

காவி என்றாலே அது தியாகத்தையே குறிக்கும் ஆனால் அதை தீவிரவாதம் என்று கூறி மாலேகான் குண்டு வெடிப்பு சம்யுக்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு என்று வரிசையாக குற்றவாளிகளை தப்பவிட்டு இந்துத்வவாதிகளை கைது செய்த சோனியா கூட்டம் இதன் மூலமாக இந்துத்வா அமைப்புகளையும் இந்துத்வா அரசியலை எடுத்து செல்லும் பிஜேபி கட்சியையும் தீவிரவாத இயக்கங்களாக மக்களிடம் காண்பிக்க நினைத்தது.
.
ஆனால் காலம் என்ன பதில் அளிக்கிறது பாருங்கள். சோனியா அவர் மகன் ராகுல் மருமகன் ராபர்ட் வதேரா என்று வரிசையாக குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் அடையாளம் காணப்பட்டு இப்பொழுது ஜாமீனில் இருக்கிறார்கள்.

அதேமாதிரி மகாராஸ்டிரா காங்கிரஸ் அரசின் பேச்சைக்கேட்டு இந்து தீவிரவாதிகள் என்று புதிய வார்த்தையை உருவாக்கி வழக்கை திசை திருப்பிய மகாராஸ்டிரா தீவிரவா த தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரேவை பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதால் காவி என்றுமே தியாகத்தின் அடையாளம் என்று மகாராஸ்டிரா மக்கள் உணர்ந்து கொண்டனர்

இப்பொழுது பேத்தி வயதில் இருக்கும் பெண்க ளோடு சல்லாபித்து வரும் காமுகன் திக்விஜய் சிங்கை போபாலில் வீழ்த்தி அவரின் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வர அவரின் பேத்தி வயதில் இருக்கும் காவித்தியாகி சாத்வி ப்ரக்யா தாக்கூரை காலம் போபாலுக்கு அனுப்பியுள்ளது.!

– பாமர பண்டிதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...