கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி மார்கெட்டாக கருதப்படும் கோயம்பேடு காய்கறி சந்தையில், அவ்வப்போது மக்கள் பிரதானமாக உபயோகம் செய்யும் பொருட்களின் விலை திடீர் உச்சத்தை காணுவது வாடிக்கையாகியுள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெங்காயத்தின் விலை அதிர்ச்சியுறும் வகையில் உயர்ந்த நிலையில், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட வெங்காயங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டு தக்காளி கிலோ ரூ.25 மற்றும் ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென விலை உச்சமடைந்து கிலோ தக்காளி ரூ.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.