பொதுவாக TRUE CALLER செயலி, தெரியாத நம்பரின் தகவல்களை தெரிய கொள்ள உதவும் என்பது நாம் அறிந்த ஒன்றே.
தற்போது இந்த TRUE CALLER செயலியில் புதிய வசதிகள் சேர்கப்பட்டுள்ளன.
அதில், க்ரூப் வாய்ஸ் காலிங், ஸ்மார்ட் எஸ்எம்எஸ் மற்றும் இன்பாக்ஸ் கிளீனர் போன்ற அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. க்ரூப் காலிங் அழைப்பில் ஒரே நேரத்தில் எட்டு நபர்களுடன் பேச முடியும்.
க்ரூப் வாய்ஸ் காலின் போது, பயனருக்கு தெரியாமல் ஏதேனும் ஸ்பேம் பயனர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களை அடையாளம் காண முடியும். புதிய பங்கேற்பாளர்களை போன் காண்டாக்ட்டில் சேர்க்காமலேயே வாய்ஸ் காலின் போது சேர்க்க செய்ய முடியும்.
ஸ்மார்ட் எஸ்.எம்.எஸ் SPAM-ஐ தடுக்கவும் , பயனுள்ள தகவல்களை வகைப்படுத்தவும் , கட்டணங்கள் சார்ந்த செய்திகளை உங்களுக்கு நினைவூட்டவும் செய்கிறது..
புதிய இன்பாக்ஸ் கிளீனர் அம்சம் பயன்படுத்தப்படாத மெசேஜ்களை அகற்றுவதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸை உருவாக்கலாம்.
பயனர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக TRUE CALLER நிறுவனம் தெரிவித்துள்ளது.