
அற்புதமான பேஸ்ட்ரி வடிவமைப்புகள் மற்றும் சிற்பங்களுக்கு பெயர் போன பேஸ்ட்ரி செஃப்பான அமுரி குய்ச்சோன் (Pastry chef Amaury Guichon) தனது புதிய படைப்பான சாக்லேட் ராக்கெட் ஷிப் (Chocolate rocket ship) மூலம் நெட்டிசன்களையும், மக்களையும் மீண்டும் திகைப்பு மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
சாக்லேட்டை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ள பேஸ்ட்ரி செஃப் Amaury Guichon-ன் புதிய படைப்பை கண்டு அவரது திறமைகள் மற்றும் துல்லிய வேலைகளை பார்த்து மிகவும் வியந்துள்ளனர்.
பலரது கவனத்தையும் ஈர்த்த சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட ராக்கெட் ஷிப்பை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் ஷேர் செய்து இருக்கிறார் பேஸ்ட்ரி செஃப் அமுரி குய்ச்சோன்.
வீடியோவை பார்த்தால் செயல்முறை எளிமையானதாக தோன்றலாம், ஆனால் இது மிகவும் கடினமான பணியாகும், மேலும் நிறைய முயற்சி மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது.
Chocolate rocket ship-ன் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக துல்லியமாக அவர் உருவாக்குவதை காட்டும் வீடியோ கிளிப் பின்னணியில் இனிமையான இசையுடன் தொடங்குகிறது.
இந்த ஸ்விஸ்-பிரெஞ்சு பேஸ்ட்ரி செஃப் தனது அற்புத படைப்பான ராக்கெட் ஷிப்பை உருவாக்க, அதன் ஒவ்வொரு பாகங்களையும் உருவாக்கி உண்ண கூடிய வண்ணங்களால் அதற்கு வண்ணம் தீட்டுகிறார்.
அந்த வீடியோவில் முதலில் Amaury Guichon ஒரு தட்டில் டன் சாக்லேட்களை உருகுகிறார். சாக்லேட் செட் ஆனதும், அது ஒரு நீளமான கொம்பு போன்ற வடிவத்தைக் கொடுக்கிறது. பின் அவர் இதை ஒரு வட்ட சாக்லேட் தளத்துடன் இணைத்து, ராக்கெட்டில் இருந்து வரும் புகை போல தோற்றமளிக்க அடித்தளத்தில் சாக்லேட் ‘பபுள்ஸ்களை’ (bubbles) சேர்க்கிறார்.
கடைசியாக அவர் பல்வேறு நுட்பங்கள் மற்றும் அளவீடுகளைப் பயன்படுத்தி ராக்கெட் ஷிப்பை தயாரிக்கிறார். எல்லாம் தயாரானதும் அவர் தேவையான கலர்களை சேர்த்து மெருகூட்டுகிறார்.
இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது முதல், மில்லியன் கணக்கான வியூவ்ஸ்கள் மற்றும் லட்சக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாராட்டு கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது.
ஒரு யூஸர் “இது ஒரு தலைசிறந்த படைப்பு! உங்கள் கலைக்காக நீங்கள் ஒரு முழு அருங்காட்சியகத்திற்கு தகுதியானவர்!” என்று Amaury Guichon-ஐ புகழ்ந்து உள்ளார்.
மற்றொரு யூஸர் , “நீங்கள் ஒரு நவீன வில்லி வொன்கா (Modern Willy Wonka) என்று அழைக்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்து உள்ளார்.
அமுரி குய்ச்சோனின் இன்ஸ்டா அக்கவுண்ட்டை சுமார் 5.3 மில்லியன் யூஸர்கள் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/CYRhj60pcyC/?utm_source=ig_embed&utm_campaign=loading