ஒரு 20 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மலேசியாவில், இரு சக்கர வாகனத்தை மழையில் ஓட்டி வரும் ஒரு நபர் நடு சாலையில் ஸ்கிப்பாகி கீழே விழுகிறார். எழுவதற்கு முன்பு அவரை நோக்கி வேகமாக ஒரு ட்ரக் லாரி வந்து கொண்டிருக்கிறது.
பார்த்ததும் பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோவை கண்டதும் அடுத்து அவருக்கு என்ன ஆகிருக்குமோ என்று நினைக்கையில் சட்டென்று அவர் எழுந்து விலகி விடுகிறார்.
கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா இரு சக்கர வாகனத்தில் பயணத்தவரின் நிலை அவ்வளவு தான்.
இரண்டு நொடிகள் தான். கண்ணிமைக்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அந்த நபருக்கு அன்று மிகவும் அதிர்ஷ்டமான நாள் என்பதால் அவர் தப்பித்தார் என்று தான் நினைத்துக் கொள்ள வேண்டும்.