November 7, 2024, 2:45 AM
25.5 C
Chennai

மழை: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?

கேரள கடலோர பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் தமிழகம், திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வருகிற 24-ம் தேதி வரை தென் தமிழகம், வட தமிழகம், திருப்பூர் கோவை, நீலகிரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ,திண்டுக்கல் ,தேனி ,விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகிற 24-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ALSO READ:  மதுரை மாவட்டத்தில் கன மழை!

வருகிற 25ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்ட மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .

காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் நவ.07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லகு ரக வாகன உரிமம் வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலகு ரக வாகன உரிமம் பெற்றவர்கள் 7500 கிலோவிற்கு மிகாமல் இருக்கும் சரக்கு வாகனங்களை ஓட்டலாம் என்று,

நாளை திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்! விரிவான ஏற்பாடுகள்!

முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நாளை 7.11.24 வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு முறைமைகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!

இந்நிலையில், தாம்பரம் திருநெல்வேலி ரயிலை திருச்செந்தூர் வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்!

பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் நாளை வியாழக்கிழமை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நடக்கிறது .