June 16, 2025, 11:24 AM
32 C
Chennai

கரை ஒதுங்கிய மீனால் கலங்கிய கலிபோர்னியா!

fish drahula

அமெரிக்காவில் டிராகுலா போல உடலமைப்பு கொண்ட வினோத மீன் ஒன்று கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் வழக்கம்போல மக்கள் தங்களது உடற்பயிற்சிகளை மேற்கொள்ள சென்றிருக்கின்றனர்.

அப்போது ஒரு நபர் தூரத்தில் ஏதோ நீளமாக கிடப்பதை பார்த்துள்ளார். ஆர்வம் காரணமாக அதன் அருகே நெருங்கியுள்ளார்.

சுமார் நான்கு அடி நீளத்தில் கிடந்த வினோத மீனை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அவரது அதிர்ச்சிக்கு காரணம் அந்த மீனின் தோற்றம் தான்.

drahula

அந்த மீனிற்கு டிராகுலா போல இரண்டு நீளமான கோரை பற்களும், முதுகில் நீளமான துடுப்பு போன்ற பகுதியும் இருந்திருக்கிறது. நான்கு அடி நீளம் இருந்த மீன் அசையவே, உயிர் இருப்பதை அறிந்த அந்த நபர் அதனை உடனடியாக மீண்டும் கடலுக்குள் விட்டிருக்கிறார்.

கலிபோர்னியா கடற்கரையில் வினோத மீன் ஒன்று கரையொதுங்கிய சம்பவம் வைரலாக பேசப்பட்டிருக்கிறது. மேலும், இந்த விநோத டிராகுலா மீனின் புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் பரவியிருக்கிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய முதுகெலும்பு விலங்கியல் அருங்காட்சியகத்தில் இக்தியாலஜி (ichthyology) பிரிவின் கண்காணிப்பாளர் இது லான்செட் மீன் தான் எனத் தெரிவித்திருக்கிறார்.

fish 1

நீண்ட மூக்கு கொண்ட லான்செட் மீன், அறிவியல் ரீதியாக அலெபிசாரஸ் ஃபெராக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இவை துருவ பகுதிகள் அல்லாது உலகம் முழுவதிலும் உள்ள பிற கடற்பகுதிகளில் 350 முதல் 6,500 அடி ஆழத்தில் வசிப்பவை.

சூரிய ஒளி குறைவாக இருக்கும் இடங்களில் வாழும் இந்த மீன்கள், அங்குள்ள இருளான பகுதிகளில் பதுங்கி இரைகளை வேட்டையாடும் திறமை கொண்டவை என்கிறார்கள் நிபுணர்கள். கலிபோர்னியாவில் கரையொதுங்கிய இந்த வினோத மீனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories