02-06-2023 12:10 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Become a member

    Get the best offers and updates relating to Liberty Case News.

    ― Advertisement ―

    spot_img

    செங்கோட்டை ஸ்ரீ நவநீதகிருஷ்ண ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆற்றங்கரை தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை இன்று காலை நடைபெற்றது.

    Shut up. Shall We?

    Homeஅடடே... அப்படியா?திருவட்டாறு கோயில் கிழக்கு வாசலில் ஆபத்தான கல்மண்டபம்!

    திருவட்டாறு கோயில் கிழக்கு வாசலில் ஆபத்தான கல்மண்டபம்!

    –எம். எஸ். அபிஷேக்-

    திருவட்டார் கோவில் கிழக்கு வாசலில் ஆபத்தான கல்மண்டபம் உள்ளதை பராமரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கிழக்கு வாசல் அருகில் ஆபத்தான நிலையில் இருக்கும் கல்மண்டபத்தை பராமரிக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6.ந்தேதி கும்பாபிஷேகம் நடந்ததை அடுத்து நாள் தோறும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கிழக்கு நடையில் இருந்து ஆற்றுக்குச்செல்லும் பாதையில் கல்மண்டபம் உள்ளது. இந்த கல்மண்டபம் வழியாக பூஜாரிகள், பக்தர்கள் ஆற்றுக்கு இறங்கி நீராடி விட்டு கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த கல்மண்டபம் பராமரிப்பின்றி புதர்மண்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கல்மண்டப சுவர்கள் ஒரு பகுதியில் முழுமையாக இடிந்து காணப்படுகிறது. இதனால் இந்த கல்மண்டபம் வழியாக ஆற்றுக்குக்கு குளிக்கசென்று வரும் அர்ச்சகர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டால் மண்ட்பம் முழுமையாக இடிந்து விழுந்து ஆற்றுக்குச்செல்ல முடியாத நிலை ஏற்படும். புராதன நகரான திருவட்டாரில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கல்மண்டபத்தை பழமை மாறாமல் பராமரித்து சீரமைக்க வேண்டும் என திருவட்டார் அன்ன பூர்ணா சேவா டிரஸ்ட் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு கோரிகை மனு அளித்துள்ளார்.