விவசாயிகளுக்காகப் போராட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகம் வரம் போது நடிகர் விஜய் ஆதரவு அளிப்பாரா?’ என பொங்கலூர் இரா.மணிகண்டன் கேள்வி எழுப்பியுள்ளார். உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வின் விவசாயிகள் இயக்க தமிழக ஒருங்கிணைப்பாளருமான பொங்கலூர் இரா.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. ”நிலம் கையக மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளுக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ரவி கிருஷ்ண மூர்த்தியும், பொஙகலூர் மணிகண்டன் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தையும் அணுகி விவசாயப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்தி வரும் அவருக்கு ஆதரவு திரட்டி வருகிறோம். மேலும் ரவி கிருஷ்ண மூர்த்தியும்,தமிழக உழவர் உழைப்பாளர் சங்க தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தமிழக விவசாயிகள் அமைப்புகளின் பல்வேறு பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகத்துக்கு வர வேண்டும் என்று இரண்டு முறை அவரது சொந்த ஊருக்கே சென்று தமிழக விவசாயிகள் சார்பில் சந்தித்து பேசி அழைப்பு விடுத்து வந்துள்ளோம்.அவரும் வருவதாக ஒப்புக் கொண்டு மே மாதம் முதல் வாரத்தில் நீங்களே தேதியை முடிவு செய்து கொள்ளுங்கள் வருகிறேன் என்று ஒப்புதல் கொடுத்து விட்டார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்தியாவில் லோக்பால் மசோதா மற்றும் தகவல் உரிமைச் சட்டத்தை உருவாக்க வேண்டி போராடி போதும்,தொடர் உண்ணாவிரதங்கள் மூலமும் இந்தியாவையே உலுக்கும் வகையில் போராடிய போதும் நாட்டின் பெரும்பாலான மக்கள் -தலைவர்கள்-திரைப்படத் துறையினர் -இளைஞர்கள்-மாணவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து மகாத்மா காந்திக்குப் பிறகு தானாக முன்வந்து அன்னாவை ஆதரித்தார்கள். அப்போது தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜய் நேரடியாக உண்ணாவிரத மேடைக்கே சென்று அன்னாவை சந்தித்து அவரது போராட்டத்தை ஆதரித்து ஆச்சரியப் படுத்தினார். இந்நிலையில் சமீபத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாளனாக காட்டிக் கொண்ட ”கத்தி ”என்ற திரைப்படத்தில் நடித்து பெரிய விவாதத்தை உருவாக்கினார்.இப்போது சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தேசிய அளவில் மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்.நிழலில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடி பாராட்டைப் பெற்ற நடிகர் விஜய் நிஜத்தில் போராடும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கரத்தை வலுப்படுத்தி விவசாயிகளைக் காக்க முன்வருவாரா என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். எந்தவிதபிரதிபலனும்,உள்நோக்கமும்,அரசியல் இலாபமும் இன்றி மக்களின் ,விவசாயிகளின் நலன் ஒன்றை மட்டுமே கொண்டு போராடிக் கொண்டு ,விவசாயிகளிடையே விழிப்புணர்வை உருவாக்கவும்,தமிழ்நாட்டுக்கு மே மாதம் வருகை தரும் அன்னா ஹசாரே வரவேற்கும் வகையிலும்,விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அறிக்கை வெளியிட்டு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் நேரடியாகப் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தமிழ்நாட்டில் எத்தனையோ நடிகர்கள் இருக்க விஜய்யை மட்டும் அழைப்பதன் காரணம்,ஏற்கனவே அவர் மட்டும் தான் அன்னா ஹசாரேவை சந்தித்து அவரை ஆதரித்தவர்.விவசாயிகளின் ஆதரவாளனாக தனது கத்தி திரைப்படத்தில் போராடியவர்.எனவே எவ்வித நோக்கமும் இன்றி நடிகர் விஜய் மத்திய அரசின் நிலம் கையக மசோதாவுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதோடு,அன்னா ஹசாரே கலந்து கொள்ளும் தமிழகப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
‘கத்தி’ விஜய் நெஜமாவே விவசாயிகளுக்காக போராட முன்வருவாரா ?: பொங்கலூர் மணிகண்டன்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari