Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்விதிகளும் விதிவிலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!

விதிகளும் விதிவிலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar 1 - Dhinasari Tamil

சன்னியாசிக்குள்ள விதிகளை மீறி சங்கர பகவத்பாதர் தாயின் ஈமக் கடன்களை செய்தது விசேஷமான விதிவிலக்குகளில் சேரும்‌ எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஆராய்ந்தால் அவர் செய்தது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான் என்று நமக்கு புரியும்.

பகவத்பாதரின் தந்தையான சிவகுரு. தனது தெய்வீக குழந்தையின் உபநயனத்தை நடத்தி வைப்பதற்கு முன் காலமாகிவிட்டார். சங்கரின் தாய் ஆர்யாம்பாள்தான் ஒரு உறவினரின் உதவி கொண்டு தீட்டு காலம் முடிந்ததும் பகவத்பாதருக்கு உயநயனத்தை செய்து வைத்தாள். அப்போது சங்கர பகவத்பாதருக்கு 5 வயதே ஆகியிருந்தது.

சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி அவர் ஒரு குருவின் வீட்டிற்கு சென்று மிக விரைவிலேயே சாஸ்திரங்களைக் கற்றுத் தெளிந்தார். தனது படிப்பை முடித்துக்கொண்ட அவர் குருவின் வீட்டைவிட்டுப் புறப்படும் போது அவருக்கு வயது 7. அதற்குப்பின் மிகவும் சிரத்தையுடன் அவர் தனது தாய்க்கு சேவை செய்து வந்தார். ஆர்யாம்பாள் குளிப்பதற்காக நதியை நோக்கிச் சென்றாள். அன்று வெயில் கடுமையாக இருந்ததால் வெப்பத்தை பொறுக்க முடியாமல் மயங்கி விழுந்தார். வெகு நேரமாகியும் தாய் வீடு திரும்பாததைப் பார்த்து பகவத்பாதர் அவளைத் தேடிச் சென்றார். வழியில் மயங்கிக் கிடந்த தாயின் முகத்தில் நீரை தெளித்து அவருக்கு நினைவு திரும்பும் படி செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த நதி அவர் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் இருந்தது. அன்னையின் மேல் இருந்த அன்பின் காரணமாக தினமும் நதிக்குச் சென்று வரும் சிரமம் தமது தாய்க்கு இருக்கக் கூடாது என பகவத் பாதர் எண்ணினார். எனவே நதியை தெய்வமாக கருதி அதனிடம் ஒரு பிரார்த்தனையை வைத்தார். அதன் பாதையை மாற்றிக் கொண்டு தமது வீட்டின் அருகில் பாய்ந்து ஓட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அந்த தெய்வீக குழந்தையின் உண்மையான பிரார்த்தனை வீண் போகாமல் அவர் வீட்டு வாசலிலேயே நதி சென்றது. ஆர்யாம்பாள் நதி செல்வதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். அவளது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் அவருடைய மனம் இவ்வுலகத்தை துறக்கவே நினைத்திருந்தது. வைராக்கியத்துடன் விளங்கினார். ஒருநாள் சில முனிவர்கள் அவர் வீட்டை தேடி வந்தனர். அவரது ஆயுள் மிகவும் குறைவு என்று கூறினார்கள். ஆர்யாம்பாள் மிகவும் கவலைப்பட்டாள். கவலையிலிருந்து அவளை பகவத்பாதர் படிப்படியாக சமாதானப்படுத்தி வந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பகவத்பாதாள் ஒரு குடும்பத்தில் பிரிவு ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாதது என்றும் இந்த உலக வாழ்வில் இம்மி அளவு கூட சுகம் இல்லை என்றும் தனது தாய்க்கு எடுத்துச் சொன்னார். பிறவிக் கடலைக் கடப்பதற்கு நாம் துறவரத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார் பகவத் பாதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஆர்யாம்பாள் கலங்கிப்போய் எதிர்ப்பு தெரிவித்தாள். எனக்கு இருக்கும் ஒரே புதல்வன் நீ. எப்படித்தான் உன் பிரிவை தாங்கிக் கொள்ள முடியும் நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார். பகவத்பாதர் தாயை சமாதனப்படுத்தி மேற்கொண்டு கருத்து எதையும் கூறாமல் அப்படியே நிறுத்திக் கொண்டார். அவர் மனம் திருமணத்தை நாடியதே இல்லை. தாயின் வார்த்தைகளுக்கு விரோதமாக என்னால் நடந்து கொள்ளவும் முடியாது. எனவே என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால் அவளிடம் நான் ஒரு விடுதலை பெற்றாக வேண்டும் முழு மனதுடன் அவளது சம்மதம் கிடைத்து அவள் சம்மதம் பெறவேண்டும் அல்லது அரையளவிற்கு. இந்த அளவிற்கு நாம் எதிர்பார்க்கலாம் என்று ஆலோசித்தார்.

அவருக்கு எட்டு வயதிருக்கும் போது நதிக்குக் குளிக்கச் சென்றார். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது முதலை ஒன்று அவர் காலைப் பற்றிக் கொண்டது. உரக்கக் கூச்சலிட்டு ஆர்யாம்பாள் நதியை நோக்கி வந்து எனது கணவர் இருக்கும் போது அவர் எனக்கு புகலிடமாய் இருந்தார். அவர் இறந்த பிறகு எனக்கு புகலிடமாக என் மகன் தான் இருக்கிறான் இப்பொழுது அவனையும் அழைத்துக் கொண்டு விடாதே என கதறினாள். அம்மா இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் நான் துறப்பதற்கு எனக்கு அனுமதி தந்தால் இந்த முதல்ல என்னை விட்டுவிடும். நீ அனுமதித்தால் இப்போதே நான் சன்னியாசத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார். இப்படி ஒரு சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டார். மகனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தாள். அவருக்கு தனது சம்மதத்தை அளித்ததுமே பகவத்பாதர் மானசீகமாக சன்னியாசத்தை எடுத்துக் கொண்டுவிட்டார். இதன்பிறகு சாஸ்திரப்படி எங்கு வேண்டுமானாலும் சென்று சன்னியாசத்தை எடுத்துக் கொள்ள முழு சுதந்திரம் அவருக்கு இருந்த போதிலும் தமது தாயை அவர் சமாதானப்படுத்த நினைத்தார். அவர் தம்மைப் பற்றியும் அவளைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்று அவளிடம் கூறினார். தமது தந்தைக்கு நிறைய செல்வம் இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றுவார்கள் என்றும் எதிர்காலத்தில் அவளுக்கு ஆரோக்கியம் குன்றி போனாலும் அவர்கள் அவளை கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்தார் பகவத்பாதர். அவள் கண்ணெதிரே இருப்பதால் அவளுக்கு கிடைக்கும் நன்மையை காட்டிலும் பன்மடங்கு நன்மைகள் நெடுந்தொலைவில் இருந்தாலும் ஏற்படும் என்று தாய்க்கு தெரிவித்தார்.

நீ உயிருடன் இருக்க வேண்டும் என விரும்பியதால் தான்சன்னியாசத்தை எடுத்துக் கொள்ள உனக்கு நான் சம்மதம் கொடுத்தேன். என்றும் எனது ஒரே புதல்வன் நீதான் நான் இறந்து போனால் எனது ஈமக்கடன்களை நீதான் வந்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உன்னை மகனாக நான் பெற்றெடுத்தன் பலன்தான் என்ன? என்று கூறினாள்.

தாய்க்கு ஏமாற்றத்தை உண்டாக்க விரும்பாதவர் உனது ஆசையை நிறைவேற்றுவேன். அந்த கடைசி காலத்தில் நான் எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் உன்னிடத்தில் வருவேன். உனது ஈமச் சடங்குகளை நானே செய்கிறேன் என்று சத்தியம் செய்தார். கொடுத்த வாக்கை எதையும் பொய்யாக போகக்கூடாது என்பதுதான் தர்மம். பகவத்பாதர் தாம் கொடுத்த வாக்கை பெரிதும் மதித்தார். பல ஆண்டுகள் கழித்து பகவத் பாதாள் சிருங்கேரியில் இருக்கும்போது தன்தாய் கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை தனது ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டார். தமது யோக சக்தியால் மந்திர சக்தியால் பல சித்திகளை அடைந்திருந்தார். அவற்றுள் ஒன்றுதான் பாதுகா ஸித்தி. நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்திலேயே குறுகிய காலத்தில் சென்றடைய முடியும். பொதுவாக அமானுஷ்ய சக்திகளை ஒருவர் அடைந்திருந்தாலும் அவற்றை உபயோகப்படுத்த கூடாது. இருப்பினும் அவற்றை பயன்படுத்த வேண்டிய நெருக்கடியான தருணங்களில் கூட ஒருவன் பிரயோகிக்க வில்லை என்றால் அவன் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறான் என்றே சொல்லவேண்டி வரும். பகவத்பாதர் பாதுகா சித்தியை தமது தாய்க்காக உபயோகித்து அவர் இறப்பதற்கு முன் அவள் அருகில் வந்து சேர்ந்தார். அங்கு அவள் மனதில் இறைவனை நிலைக்கச் செய்து மிக மேன்மையான நிலையை அவளுக்கு கிடைக்க வழி செய்தார். பிறகு தமது உறவினர்களிடம் இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கு உதவிபுரியுமாறு கேட்டுக் கொண்டார். துரதிஷ்டவசமாக அவருடைய மகிமையை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இவர் சன்யாசியாய் இருக்கின்ற காரணத்தால் தனது தாயை தகனம் செய்வதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று சொல்லி அவருக்கு உதவி புரிய மறுத்துவிட்டார்கள்.ன மேலும் அவர்கள் வசைச் சொற்களைக் கூறி அவரை பழித்தார்கள். உலர்ந்த குச்சிகள் எல்லாம் தாமே சேகரித்து தகனம் செய்தார்.

பகவத்பாதர் இப்பேர்ப்பட்ட காரியத்தை செய்வதற்கான ஒரே காரணம் அவர்களை விட்டுப் புறப்படும்போது தனது தாய்க்கு தாம் அளித்த வாக்கைஎப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற அவரது தீவிரமான எண்ணமே. அவர் தாயின் மேல் இந்த பாசத்தினால் அல்லது தம்முடைய சொந்த நலன்களை கருத்தில் கொண்டு இவ்வாறு செயல் புரியவில்லை. ஈமச்சடங்குகளை செய்வதற்கு சன்யாசிகளுக்கு அதிகாரம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் பேரூண்மையை உணர்ந்த பகவத்பாதர் போன்ற ஞானிகளுக்கு எந்த வித கட்டுப்பாட்டையும் எவராலும் விதிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். சத்வம் ரஜஸ் மற்றும் தமோ குணங்களைக் கடந்த பாதையில் எவர் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு செய்ய வேண்டியது என்றோ செய்யக்கூடாது என்றோ எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தத்துவத்தை அறிந்த ஒரு ஞானிக்கும் ஞானம் அடையாத ஒரு ஞானிக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதிகளை மீறினால் ஒரு அஞ்ஞானி பாவத்தை அடைவான். பரம்பொருளில் பகவத்பாதர் உறுதியாக நிலை பெற்றிருந்த காரணத்தால் புண்ணியமோ பாவமோ அவருக்கு வரப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் கர்த்ருத்வத்திலிருந்து நான் செய்கிறேன் என்ற எண்ணத்திலிருந்து முழுவதும் விடுபட்டு இருந்தார்.

ஒரு ஞானி பற்றுதலும் கலக்கமும் இன்றி ஒரு காரியத்தை செய்வதற்கும் ஒரு அஞ்ஞானி அதே காரியத்தை பற்றுதலுடனும் கர்த்ருத்வத்தோடும் செய்வதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது என்பதை எடுத்துக்காட்ட நகைச்சுவை மிக்க ஒரு கதை உள்ளது.

ஒரு உண்மையான ஞானியும் வெறுமனே உபதேசம் மட்டும் செய்யும் ஒரு அஞ்ஞானியும் கொதிக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. அங்கிருந்த ஒரே ஒரு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர்களுக்கு கள் தான் கிடைத்தது ஞானி அதை ஒரே மூச்சில் குடித்தார். தாகசாந்தி செய்துகொள்ள ஏதோ ஒரு திரவம் தேவைப்பட்டது அவருக்கு அவ்வளவு தான். இதைப் பார்த்த அஞ்ஞானி தனக்கும் குடிக்க கள் வேண்டும் என்று கேட்டார். நீங்கள் குடிக்கும் போது நான் ஏன் குடிக்க கூடாது என்று சொல்லிக்கொண்டே குடித்தார்.

இதன் பின் அவர்கள் இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள் மீண்டும் அவர்களுக்கு தாகம் ஏற்பட்டது. மனித நடமாட்டமே இல்லாத இடத்தில் இரும்பை உருக்கும் ஒரு தொழிற்சாலையை மட்டும் அவர்கள் கண்டார்கள். அங்கே அவர்கள் சென்றபோது உருக்கிய இரும்பு தான் அவர்களுக்கு கிடைத்தது. அதில் சிறிது எடுத்து ஞானி குடித்து முடித்தார். நீங்களும் என்னைப்போல் இதனை குடிக்கப் போகிறீர்களா என்று கேட்டார். ஆனால் அஞ்ஞானியோ தனது தொண்டை வேண்டும் என்று சொல்லிக் குடிக்க மறுத்துவிட்டார். அப்பொழுது ஞானியான அம்மகாத்மா அஞ்ஞானியை நோக்கி அப்படி என்றால் சிறிது நேரத்திற்கு முன் நீங்கள் கள் குடித்ததற்காக உங்களைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

உலக விஷயங்களில் மட்டுமின்றி நாம் சாஸ்த்திர விஷயங்களிலும் உள்ள விதிமுறைகளை ஒருவன் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறுவது மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்கள் எவை என்று சாஸ்திரங்களில் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. வேதங்களை நன்கு அறிந்த மகா புருஷர்களும் இங்கே சந்தர்ப்பங்களைப் பற்றி நமக்கு நன்கு விளக்கியுள்ளார்கள். சில விசேஷமான விதிவிலக்குகள் இருந்தாலும் தத்துவத்தை அறியாத அஞ்ஞானிகள் அவற்றை என்றுமே கடைப்பிடிக்கக்கூடாது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,117FansLike
376FollowersFollow
70FollowersFollow
74FollowersFollow
3,257FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...