காயத்ரி போன்ற மந்த்ர ஜபம் செய்யும் போதும், அதன் பொருளை அறிந்து அனுஸந்தானம் செய்தால் மிகவும் விசேஷமான பலன் ஏற்படும்.
சுலோகங்களை விஷயத்திலும் இப்படித்தான், இது பகவத்பாதாள் நமக்குச் செய்த மிகப் பெரிய உபகாரம்.
அவர் எவ்வளவுதான் உபகாரங்கள் செய்தாலும் நாம் அவற்றையெல்லாம் மறந்து விட்டு வெளிப் பொருட்கள் விஷயத்திலேயே ஈடுபாடு வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படியிருக்கக் கூடாது. அவரது தத்துவத்தைக் கூறும் கிரந்தங்களை முடிந்த வரை அனுஸந்தானம் செய்ய வேண்டும்.
நேஹாபிக்ரமநாசோsஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே I
ஸ்வல்பமப்யஸ்யதர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் II
“இதில் (கர்மயோகம்) செய்யப்பட்ட முயற்சி வீணாவது இல்லை; இது எதிரிடையான பலனை உண்டாக்காது. இந்த தர்மத்தின் சிறிதும்கூட பெரிய பயத்தினின்றும் காப்பாற்றும்” என்று கிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளார்.
இதற்கென்று நமது அன்றாட வாழ்க்கையில் சிறிதளவாவது நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும். எவ்வளவோ வீணான காரியங்களில் எல்லாம் நாம் நம் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்குப் பதிலாக பகவத்பாதாளைப் பற்றிய சிந்தனம், அவரது நூல்களைப் படித்தல் போன்ற பயனுள்ள காரியங்களை வைத்துக்கொண்டால் நமக்கு மிகுந்த சிரேயஸ் உண்டாகும்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்