Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜ தசகம்.. தமிழ் அர்த்தத்துடன்...!

திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜ தசகம்.. தமிழ் அர்த்தத்துடன்…!

margatha natarajar
margatha natarajar

நடராஜ தசகம்!

தில்லையில் நின்றாடி உலகைக் காக்கும் நடராஜப் பெருமானை குறித்து அனந்தராம தீட்சிதர் இயற்றிய துதி, நடராஜ சதகம். இந்த சிதம்பரமென்னும் அருந்தலத்தில் சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட சபாநாயகனைப் போற்றுகிறது இந்தத் துதி. இந்தப் பதினொரு ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தால் எல்லாவகையான நோய்களும் நீங்கும். நடராஜப் பெருமானின் திருவருளால், அனைத்து நன்மைகளும் கிட்டும்.

கனகஸபாகத காஞ்சனவிக்ரஹ
காமவிநிக்ரஹ காந்ததனோ
கலிகலிதாகில பாபமலாபஹ
க்ருத்திஸமாவ்ருததேஹ விபோ
குவலயஸன்னிப ரத்னவிநிர்மித
திவ்யகிரீட ஸுபாஷ்டதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!! 1

பொதுப் பொருள்: தங்க மயமாக ஜொலிக்கும் சபையில் அழகுத் தோற்றம் காட்டுபவரே, பொன்போன்று தகதகக்கும் பேரெழில் கொண்டவரே, மன்மதனை வீழ்த்தியவரே, திடகாத்திரமான சரீரம் கொண்டவரே, கலியினால் ஏற்பட்ட எல்லாவிகையான பாபங்கள் என்கிற அழுக்கைப் போக்குகிறவரே, யானைத் தோலை அணிந்தவரே, உலகையே காக்கும் பிரபுவே, நீலோத்பல மலர் நிறம்கொண்ட ரத்தினங்களால் இழைக்கப்பட்ட திவ்ய கிரீடத்தைச் சூடியவரே, மங்களமாக விளங்கும் எட்டு தோற்றங்களைக் கொண்டவரே, உலகின் நாயகனே, மங்களமானவரே, நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை எங்களுக்கு அளித்தல் வேண்டும்.

கரகலிதாமல ஸூலபயங்கர
காலநிராஸக பாதவிபோ
பதகமலாகத பக்தஜனாவன
பத்தஸுகங்கண தேவ விபோ!
ஸிவநிலயாகத பூதிவிபூஷித
தீக்ஷித பூஜித பூஜ்யதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!! 2

நிர்மலத்தை விளக்கும் சூலத்தைக் கையில் ஏந்தியவரே, கொடுந்தொழில் புரியும் காலனை உதைத்தவரே, உலகையே ரட்சிக்கும் பிரபுவே, தாமரை போன்ற தங்களது பாதங்களைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதில் மிகுந்த உறுதியோடு விளங்குபவரே, தேவர்களுக்குள் சிறந்தவரே, கைலாசத்திலிருந்து வந்தவர்களும், விபூதியினால் அலங்கரிக்கப் பெற்றவர்களுமான தீக்ஷிதர்களால் பூஜிக்கப்பட்டவரே, அவ்வாறு பேரெழில் கொண்டவரே, உலகிற்கே நாயகனான நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை எங்களுக்கு அளிக்க வேண்டும்.

ஹர ஹர ஸங்கர பக்தஹ்ருதம்பர
வாஸசிதம்பர நாத விபோ
துரிதநிரந்தர துஷ்டபயங்கர
தர்ஸன ஸங்கர திவ்யதனோ!
தஸஸதகந்தர ஸேஷஹ்ருதந்தர
ஸங்கர ரக்ஷித பார்த்தகுரோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!! 3

ஹர ஹர சங்கரா, எப்போதும் பக்தர்களுக்கு சுகத்தை அருள்பவரே, பக்தர்களின் இதயத்தில் வீற்றிருப்பவரே, சிதம்பர நாதரே, மகாபிரபுவே, இடைவிடாது பாபங்களைச் செய்யும் துஷ்டர்களுக்கு அச்சத்தை ஊட்டுபவரே, தரிசனம் செய்பவருக்கெல்லாம் முக்தியை அருள்பவரே, திவ்யத் திருவுருவம் கொண்டவரே, ஆயிரம் தலையனான ஆதிசேஷனின் இதயத்தில் இடம் பெற்றவரே, துரோணருக்கு எதிரான யுத்தத்தில் அர்ஜுனனை ரட்சித்தவரே, அனைவருக்கும் குருவானவரே, உலகிற்கு நாயகனாக, மங்களநாதனாக விளங்கும் நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், எங்களுக்கு நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

ஸிவஸிவ ஸங்கர ஸாம்பபுரந்தர
பூஜித ஸுந்தர மந்த்ரநிதே
முரஹரஸன்னிதி மங்களதர்ஸன
மந்த்ர ரஹஸ்ய சிதாத்மதனோ!
புரஹரஸம்ஹர பாபமபாகுரு
பீதிமராதிக்ருதாமகிலாம்
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்ய ஸம்ருத்திமுபார்ஜய மே!! 4

மங்களுங்களுக்கெல்லாம் மங்களத்தைச் செய்பவரே, சங்கரர் மற்றும் அம்பாளுடன் இணைந்திருப்பவரே, இந்திரனால் பூஜிக்கப்பட்டவரே, பேரழகு வாய்ந்தவரே, மந்திரங்களுக்கு இருப்பிடமானவரே, பக்கத்திலிருக்கும் முரஹரனான கோவிந்த ராஜனின் சந்நதியிலேயே மங்களகரமான தரிசனத்தை அருள்பவரே, மந்திர, ரகசிய ரூபமாகத் திகழ்பவரே, சித்ஸ்வரூபமான சரீரத்தை உடையவரே, திரிபுரஸம்ஹாரம் செய்தவரே, சித்ஸபேசா, எங்கள் பாபங்களை எல்லாம் தாங்கள்தான் போக்க வேண்டும். எங்கள் எதிரிகளால் ஏற்பட்ட எல்லா இன்னல்களையும் விலக்க வேண்டும். உலகிற்கு நாயகனே, நடராஜப் பெருமானே, தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை எங்களுக்கு அளிக்க வேண்டும்.

புஜக விபூஷண பூதிவிலேபன
பாலவிலோசன லோகதனோ
வ்ருஷபஸுவாஹன காங்கபயோதர
ஸுந்தரநர்த்தன ஸோமதனோ!
ஸுததனதாயக ஸௌக்யவிதாயக
ஸாதுதயாகர ஸத்வதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!! 5

சர்ப்பங்களால் அலங்கரிக்கப்பட்டவரே, விபூதியை அணிந்திருப்பவரே, நெற்றிக் கண்ணை உடையவரே, உலகையே சரீரமாகக் கொண்டவரே, ரிஷப வாகனரே, சிரசில் கங்கையை தரித்திருப்பவரே, பேரெழிலுடன் நடனம் ஆடுபவரே, உமையுடன் கூடிய உமையொருபாகனே, புத்ர லாபத்தையும், தன லாபத்தையும் அளிப்பவரே, அனைவருக்கும் சௌபாக்கியத்தை அருள்பவரே, நல்லவர்களிடம் பெருங்கருணை கொண்டவரே, ஸத்வகுணங்களால் ஆன சொரூபம் பெற்றவரே, உலகிற்கே நாயகனே, நடராஜப் பெருமானே நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்..

ஸகலஹ்ருதந்தர சந்த்ரகலாதர
மந்த்ரபராக்ருத பூதததே
சரணஸமர்ச்சன திவ்யக்ருஹாகத
தேவவரார்பித பாக்யததே!
விதிஹரிநாரத யக்ஷஸுராஸுர
பூதக்ருதஸ்துதி துஷ்டமதே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!! 6

அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் இடம்பெற்றவரே, சந்திரகலையைத் தரித்திருப்பவரே, மந்திரங்களாலேயே உருவான பூதகணங்களைக் கொண்டவரே, தங்களை சரணங்களால் அர்ச்சனை செய்ய தேவலோகத்திலிருந்து வந்த சிறந்த தேவர்களுக்கு எல்லா பாக்யங்களையும் அளித்தவரே, பிரம்மா, விஷ்ணு, நாரதர், யக்ஷர்கள், தேவர்கள், அசுரர்கள், பூதங்கள் ஆகியோர் செய்த துதியால் சந்தோஷம் கொண்டவரே, உலகிற்கே நாயகனே, நடராஜப் பெருமானே, தாங்கள் சிறந்து விளங்க வேண்டும். எங்களுக்கு நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

கிரிதனயார்பித சந்தன சம்பக
குங்கும பங்கஜ கந்ததனோ
திமி திமி திந்திமி வாதன நூபுர
பாததலோதித ந்ருத்தகுரோ!
ரவிகிரணாஸ்தமயாகத தைவத
த்ருஷ்டஸுநர்த்தன தக்ஷதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருதத்திமுபார்ஜய மே!! 7

பர்வதராஜகுமாரி அளித்த சந்தனம், சம்பக புஷ்பம், குங்குமம், தாமரைப்பூ இவற்றால் நறுமணம் கமழும் சரீரத்தை உடையவரே, திமி திமி திந் திமி என்று சப்திக்கும் நூபுரங்களுடன் கூடிய பாத கமலத்திலிருந்து உண்டான நடனக் கலையை உடையவரே, குருவானவரே, ப்ரதோஷ காலத்தில் வந்த தேவ கூட்டங்களுக்காக அழகிய நடனம் ஆடிக் காட்டியப் பெருந்தகையே, உலகிற்கே நாயகனே, நடராஜப் பெருமானே நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை எங்களுக்கு அளிக்க வேண்டும்.

ஹிமகிரிஜாகர ஸங்க்ரஹணோதித
மோதஸுபூர்ண ஸுவர்ணதனோ
குஹகணநாயக கீதகுணார்ணவ
கோபுரஸூசித விஸ்வதனோ!
குணகணபூஷண கோபதிலோசன
கோபகுலாதிப மித்ரமணே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!! 8

இமவானின் பெண்ணான பார்வதியை திருமணம் செய்து கொண்டதால் சந்தோஷம் நிரம்பியவரே, சிறந்த நிறம் கொண்டவரே, குஹன், கணபதி இவர்களால் போற்றப்பெற்ற குணங்களை உடையவரே, கோபுரத்தாலேயே விச்வரூபத்தைக் காட்டியவரே, குணங்களையே அலங்காரமாகக் கொண்டவரே. சூரியனைக் கண்ணாக உடையவரே, இடையர் குலத் தலைவனான கிருஷ்ணனுக்கு மிகுந்த சினேகமானவரும், உலகிற்கே நாயகனுமான நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

டமருக தாரிண மிந்துகலாதர
மிந்த்ரபதப்ரத மக்னிகரம்
குஹஜனனீயுத மாத்தம்ருகோத்தம
மர்த்திஜனாகில ரோகஹரம்!
பஜ பஜ மானஸ விஸ்ம்ருதிகாரக
ரோகதநூபரிதத்தபதம்
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாகயஸம்ருத்திமுபார்ஜய மே!! 9

உடுக்கை மற்றும் சந்திரகலையைத் தரித்தவரே, இந்திர பதத்தை அளிப்பவரும் அக்னியை கையில் தரித்தவரே, பார்வதி தேவியுடன் இணைந்தவரே, மானைக் கையில் ஏந்தியவரே, அண்டிய அன்பர்களின் எல்லா ரோகங்களையும் போக்குகிறவரே, அபஸ்மாரம் என்ற ரோக தேவதையின் சரீரத்தில் கால்வைத்து நின்ற, பரமேஸ்வரனை ஏ மனமே, என்றென்றும் பூஜிப்பாயாக. உலகிற்கே நாயகனே, நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், எங்களுக்கு நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

நதஜனஸங்கர பிங்கஜடாதர
கண்டலஸத்கர கௌரதனோ
வரதபதஞ்சலி ஸத்க்ருதி ஸன்னுத
ம்ருகசரணார்பிதபுஷ்பததே!
டமருக வாதன போதித
ஸர்வகலாகில வேதரஹஸ்யதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!! 10

வணங்கிய பக்தர்கள் அனைவருக்கும் சுகவாழ்வினை அளிப்பவரே, மஞ்சள் நிறமான ஜடையைக் கொண்டவரே, நீலக் கழுத்தில் விஷம் தாங்கியவரே, பளிச்சிடும் வெண்மை தேகம் கொண்டவரே, வரங்களை அளிப்பவரே, பதஞ்சலி முனியின் ஸ்தோத்திரத்தால் துதிக்கப்பட்டவரே, வ்யாக்ரபாதரால், மலர்களால் அர்ச்சிக்கப்பட்டவரே, உடுக்கு ஒலியாக அறிவிக்கப்பட்ட எல்லா கலைகளுக்கும் உரிமையானவரே, எல்லா வேதங்களாலும் கூறப்படும் ரகசிய ஸ்வரூபத்தை உடையவரே, உலகிற்கே நாயகனான நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், எங்களுக்கு நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

சிவதமனந்த பதான்வித
ராமஸுதீக்ஷித ஸத்கவி பத்யமிதம்
நடனபதேரதி துஷ்டிகரம்
பஹுபாக்யதமீப்ஸித ஸித்திகரம்!
படதி ஸ்ருணோதி ச பக்தியுதோ
யதி பாக்ய ஸம்ருத்திமதோலபதே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!! 11

அனைத்து மங்களங்களையும் அளிப்பதும், அனந்தராம தீக்ஷிதரால் இயற்றப்பட்டதும், நடராஜப் பெருமானுக்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடியதும், எல்லா பாக்கியங்களையும் அளிக்கக்கூடியதும், விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றக்கூடியதுமான இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிப்பவர், கேட்பவர் அனை வரும் நிறைந்த பாக்கியத்தை அடைவர். உலகிற்கே நாயகனான நடராஜப் பெருமானே, தாங்கள் சிறந்து விளங்கவேண்டும், எங்களுக்கு நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,078FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,965FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும்...

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக...

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Latest News : Read Now...