நீண்டகால பிணைப்பிற்கு.. நீக்க வேண்டியவை!

krishnar - Dhinasari Tamil

நகை வியாபாரி சிவகனேஷின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.

சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.

ஒரு நாள் அந்த நகை வியாபாரி சிவகனேஷின் மனைவி கமலா தன் மகன் பாபுவை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்…,

மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமா சரவணனின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள்.

மகன் பாபு அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான்.

அவனது மாமா சரவணன் சிறந்த விஷ்ணு பக்தர், பொய் பேசாதவர், எல்லோரிடமும் கனிந்த குணம் கொண்டவர், அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார்.

அவனிடம் கூறினார்… என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று…

பின் குடும்ப செலவுக்காக அவர் பாபுவிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக் கொள் என்றார் சரவணன்.

எனவே, அடுத்த நாள் முதல், பாபுவும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, பாபு ஒரு சிறந்த அறிவாளியாக மாறினான். வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.

நெடுந்தொலைவில் இருந்தும் கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப் பரிசோதிப்பதற்காக வந்தார்கள்.

ஒரு நாள் அவனது மாமா சரவணன் கூறினார்… மருமகனே, அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா! அம்மாவிடம் கூறு… அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.

பாபு அம்மாவிடம் இருந்து நெக்லஸை பெற்றவுடன், அந்த அவனாகவே அதனைப் பரிசோதித்தான். அது ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தான்.

அவனுடைய மாமா சரவணன் , ஒரு சிறந்த வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம் தெரிவிக்கவில்லை? என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான்.

நெக்லஸை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான். மாமா சரவணன் கேட்டார், நெக்லஸை கொண்டு வரவில்லையா? அவன் கூறினான், மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்..?

பிறகு அவன் மாமா கூறினார்… நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, அது போலியானது என்று நான் உன்னிடம் கூறியிருந்தால், நான் வேண்டுமென்றே இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும்.

ஏனென்றால், அப்போது நீ ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய். இன்று நீ, நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், உண்மையிலேயே போலியானது என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

அந்த நேரத்தில், உண்மையைக் கூறியாக வேண்டும் என்பதை விட… உறவு இழையை அறுந்து விடாமல் காப்பது மேலானது மற்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றியது.

எந்த வித பட்டறிவும் இல்லாமல், நாம் இந்த உலகில் பார்ப்பது, நினைப்பது, தெரிந்து கொள்வது எல்லாமே தவறு என்று கூறுகின்றோம்.

தவறான புரிதல்களால்* நம்முடைய உறவு முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பிறகு முறிவுக்கு இட்டுச் செல்கிறது. நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று வீழ்ச்சியும் அடைகின்றது.

நாம் ஒவ்வொருவரும் நம் உறவின் இழைகளை அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்…! நமக்கு கிடைத்த ஒவ்வொரு உறவுகளும் ஸ்ரீமந் நாராயணன் அருளால் நமக்கு கிடைத்தது என உணர்ந்து பாதுகாப்போம்.

நம் வரட்டு கவுரவத்தால்/ மாறுப்பட்ட எண்ணங்களால் கைவிட்ட/மறந்த உறவுகளை புதுப்பிப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,144FansLike
375FollowersFollow
65FollowersFollow
0FollowersFollow
2,759FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-