ஆன்மிகம் மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்

மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்

-

- Advertisment -

சினிமா:

ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி! சட்டமன்ற தேர்தலில் நிற்கவில்லை!

பல வருடங்களாக தீவிர அரசியலுக்கு ரஜினி வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்கிற அறிவிப்பே பெரும் ஆனந்தமாக இருந்தது.

குயின் வெப் சீரிஸ்ஸில் முத்தக்காட்சி! சர்ச்சையானதா?

ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு சக்தி ஷேஷாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.எம்.ஆர் கதாபாத்திரம் எம்.ஜி.ஆர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கேரக்டர் ரம்யா கிருஷ்ணனிடம் ராணி என்று கூறும் காட்சியும்,

தலைவர் சொல்லித்தான் ராகவா லாரன்ஸ், கமலைப் பாத்தாரோ?!

ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல்ஹாசன் பட போஸ்டர்களில் சாணி அடித்ததாக பேச்சுவாக்கில் சொன்னார்.

உலக புகழ் பெற்ற காதலருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்!

பூரி ஜெகன்நாத்தின் 'ஃபைட்டர்' மற்றும் க்ராந்தி மாதவ்வின் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' என மூன்று தெலுங்கு படங்கள் உள்ளது. இதில் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டாவின் 9-வது படமாகும்.
-Advertisement-

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை… இது காலத்தின் கட்டாயம்!

அது இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை நீள்கிறது..!விரைவில் அனைத்து நாடுகளிலும் வரும்!

இங்கிலாந்திலும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிஜேபி’!

"இந்நேரத்துக்கு ஏது கடை? ஷட்டர் மூடிருப்பான். பிரியாணிக்கு பாக்சிங் தான் செய்யோணும்" - கவலையுடன் கூட்டம் கலைகிறது.

எங்களுக்காக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்! காவலர்களின் கெஞ்சல் குரல்!

எங்களது காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழ, இந்தக் கோரிக்கையை முதல்வர் செவிமடுத்து, செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு பதிவு சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது...

படுகேவலம்! பாகிஸ்தான் பேச்சை எதிரொலித்த காங்கிரஸ்! தோலுரித்துக் காட்டிய அமித் ஷா!

வாழைப் பழத்தில் ஊசி ஏத்துவது போல் ஒன்றுமே தெரியாத மாதிரியே நடு சபையில் காங்கிரஸின் கோர முகத்தைக் கிழித்து எறிந்த உள்துறை அமைச்சரின் பேச்சில் வெளிப்பட்டவை.

ஜெகன்காரு! சட்டம் போட்டால் போதாது… 21 நாட்களுக்குள் செய்து காட்டுங்கள்!

மகளிருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார் நாரா லோகேஷ்.

தாய்க்காக லைசன்ஸ் வாங்க உருமாறிச் சென்ற மகன்!

பிரேசிலில் உள்ள நோவாமுட்டும் பரானா நகரை சேர்ந்தவர் டோனா மரியா. இந்தப் பெண், ஓட்டுனர் உரிமம் பெற விரும்பினார். இதற்கான சோதனைக்கு 3...

மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்!

16.12.2019 முதல் 31.12.2019 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

வீடு கட்டித் தராமல் ஏமாற்றிய கட்டுமான நிறுவனம்! 6 பேர் மீது வழக்கு பதிவு!

ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான நிறுவனத்தினர் 30 சதவீதம் மட்டுமே கட்டுமானப் பணிகளை முடித்துள்ளனர். மேற்கொண்டு வேலை எதுவும் செய்யவில்லை.

சரியான பேரு ‘ராகுல் ஜின்னா’; சொந்தம் கொண்டாடி ஏமாத்துற பேரு ‘ராகுல் காந்தி’: சொந்தம் கொண்டாட விரும்பாத பேரு ‘ராகுல் சாவர்க்கர்’!

சரியான பேரு ‘ராகுல் ஜின்னா’; சொந்தம் கொண்டாடி ஏமாத்துற பேரு ‘ராகுல் காந்தி’: சொந்தம் கொண்டாட விரும்பாத பேரு ‘ராகுல் சாவர்க்கர்’!

பச்சை துரோகிகள்! கெஞ்சும் மம்தா… மிரட்டும் ஆளுநர்!

இத்தனை ஆண்டுகள், வாக்கு வங்கியாக உருவாக்கி வைத்திருக்கும் வங்கதேச முஸ்லிம்களின் இடப் பெயர்வால் தனக்குப் பாதிப்பு என்பதை மம்தா பானர்ஜி கடும் கோபத்துடன் இந்த நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறார்.

தினசரி… வங்கதேசத்துக்கு ஆயிரக்கணக்கில் திரும்பிச் செல்லும் ஊடுருவல்காரர்கள்!

இந்த செய்தி சேனலின் வீடியோவில் வங்கதேச போலீஸ்காரர் ஒருவர் மிகத் தெளிவாக கூறுகின்றார்... இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்கள் தற்போது அங்கே மாறிவரும் சூழ்நிலையில் மீண்டும் நம் நாட்டுக்கு திரும்பி வருகின்றனர் என்கிறார்!

இதை மட்டும் செய்துட்டா… கேசிஆரின் காலில் விழுவேன்: சுவாமி பரிபூரணானந்தா!

தெலங்காணாவில் மதுவிலக்கிற்காக தேவையானால் நான் முதல்வர் சந்திரசேகர ராவின் காலில் விழுவதற்கு தயங்க மாட்டேன் என்று சுவாமி பரிபூரணாநந்தா அறிவித்தார்.

தலைவர் சொல்லித்தான் ராகவா லாரன்ஸ், கமலைப் பாத்தாரோ?!

ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல்ஹாசன் பட போஸ்டர்களில் சாணி அடித்ததாக பேச்சுவாக்கில் சொன்னார்.

நாளைமுதல் FASTAG கட்டாயம்; ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு அபராதம்.!

FASTag ஸ்டிக்கரை இல்லாத வாகனங்களுக்கு நாளை முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
- Advertisement -

“மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்”

(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-10-09-2015 தேதியிட்ட குமுதம் பக்தி.

கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர், ஒரு சமயம் மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக வந்திருந்தார். அவர் யார்? எங்கேயிருந்து வரார்ங்கறதெல்லாம தெரியாது ஏன்னா, அவர் மடத்துக்கு அடிக்கடி வர்ற ஆசாமி இல்லை.

அவர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்ததுகூட ஏதோ வேலையா மடத்துப் பக்கமா வந்தவர், அப்படியே எட்டிப் பார்த்துட்டுப் போகலாமேன்னுதான் . வந்தவர் வரிசையில் நின்னார்.தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்.
எல்லாம் கடனேன்னு செய்யறமாதிரிதான் இருந்தது.

நமஸ்காரம் செஞ்சவர் எழுந்திருந்ததும் பெரியவா அவரைப் பார்த்து, ” என்ன சுவாமியெல்லாம் திட்டறதுல இருந்து ஒருவழியா ஓய்ஞ்சுட்டே போல இருக்கு. திட்டியும் பிரயோஜனமில்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக்கூட நிறுத்திட்டே இல்லையா?” அப்படின்னு கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சி. அதோட ‘என்னடா இது, நாம எதுவுமே சொல்லலை. ஆனா எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாசார்யா சொல்றாரே!’ன்னு ஆச்சரியம்.

“பெரியவா! குடும்பம் நடத்தறதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுத்து .சரியா வேலையும் கிடைக்கிறதில்லை. பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவாளுக்கெல்லாம் கேட்கறதுக்கு முன்னாலேயே குடுக்கிற சுவாமி எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பண்றார்.? அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்” கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா சொன்னார் அவர்.

பரிவோட அவரைப் பார்த்தார் பரமாசார்யா.

” ஒரு விஷயம் கேட்கிறேன்.கரெக்டா யோசிச்சு சொல்லு. ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவா.சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். சிலருக்கு பல்வலி இவாள்லாம் அங்கே வந்திருக்கறச்சே, பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைக் கூட்டிண்டு வருவா.மாடியில் இருந்து விழுந்து நினைவு தப்பிடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா
.
இந்தமாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் எல்லாம் என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணணுமோ, யாருக்கு சட்டுன்னு சிகிச்சை பண்ணலைன்னா அப்பறம் அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்க போயிடுவா.அதுக்காக சாதரண காய்ச்சல்னோ, தலைவலின்னோ வந்தவாளை டாக்டர்கள் எல்லாம் அலட்சியப்படுத்தறாங்கறது அர்த்தம் இல்லை. அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்துக்கலாம்.பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது. ஆனா, பாம்புக்கடி பட்டவருக்கோ, விபத்துல சிக்கினவாளுக்கோ உடனடியா மருத்துவம் பார்த்தாகணும்.

சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே யாருக்கு எப்போ உதவணும்கறது தெரியறதுன்னா , பிறவிப் பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால் வரக்கூடிய சங்கடங்களை போக்கக்கூடிய பகவானுக்கு யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்னு தெரியாதா?

உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா உன்னைவிட அதிகமா அவஸ்தைப்பட்டுண்டு இருக்கிற யாருக்கோ உதவறதுக்காக சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்.

அதுக்குள்ளே அவசரப்பட்டு, தெய்வத்தை நிந்திக்கிறதும் பூஜை புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகமா பேசறதும் தப்பு இல்லையா?”

பெரியவா சொல்லச்சொல்ல, கடவுளைப்பத்தி தப்பா நினைச்சதும் பேசினதும் தப்புன்னு புரிஞ்சண்டதுக்கு அடையாளமா அந்த ஆசாமியோட கண்ணுல இருந்து தாரைதாரையா நீர் வடிஞ்சுது. அதுவே அவரோட தவறான எண்ணத்தை அலம்பித் தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது நிச்சயம்.

மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகானை பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.

அவருக்கு மட்டுமல்லாம அன்னிக்கு ஆசார்யா தரிசனத்துக்கு வந்தவா எல்லாருக்குமே-இது பரமாசார்யா நடத்தின பாடமாகவே அமைஞ்சதுன்னுதான் சொல்லணும்.

Sponsors

Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,939FansLike
177FollowersFollow
728FollowersFollow
14,700SubscribersSubscribe

சமையல் புதிது :

கட்டாயம் இப்படி செஞ்சு பாருங்க காலிபிளவர் சப்பாத்தி!

பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். இல்லையென்றால் அதையும் துருவிக் கொள்ளலாம். துருவிய காலிபிளவர், பச்சைமிளகாய்,சீரகம்,உப்பு,மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி விடவும்.

ஆரோக்கிய சமையல்: சன்னா ரைஸ்!

அதில் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.பின் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

உங்க பச்சாவுக்காக ரிச்சா ஒரு ரெசிப்பி!

பின் பன்னீரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். குக்கர் சூடானதும் நெய்யில் சீரகத்தை தாளிக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |