spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கஞ்சித் தொட்டில் விழுந்த குழந்தை!

கஞ்சித் தொட்டில் விழுந்த குழந்தை!

- Advertisement -

விஜய் நகரிலே கிருஷ்ணதேவராயர் ஆண்டகாலம் கொல்ல கொண்ட பள்ளத்திலே லிங்கன்னா காமாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் கோபண்ணா

இவர் சிறுவயதில் இருந்தே ஸ்ரீராமபிரான் மேல் அதிக பக்தி கொண்டிருந்தார் ஒரு தடவை கபீர்தாசர் இவரது பக்தியை சோதிக்க எண்ணி விக்ரகம் இருந்த பேழையை குளத்தில் எறிந்து விட்டார்.

கோபண்ணா விக்ரகத்தை காணாமல் தவிப்பதைக் கண்டு வேறொன்று தருவதாக கூறினார் கபீர். கோபண்ணா ஒப்புக்கொள்ளவில்லை. உடைந்த கால்களுக்கு பதிலாக மரக்கட்டை கால் இறந்த கண்களுக்கு பதிலாக ஆட்டு கண்ணும் பொருத்திக கொண்டாலும் ஊனம் ஊனம் தானே என வாதிட்டார்.

கபீர் ராம நாமத்தைச் சொல்லி பேழையை வரவழைத்து தந்தார் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தலையில் கை வைத்து உபதேசமும் செய்தார்.

ஸ்ரீராமநவமி

பூஜை முடிந்து பஜனை அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது. சமையல் புழக்கடையில் பந்தல் போட்டு நடந்துகொண்டிருந்தது. வடிக்கும் கஞ்சி விழ ஒரு பெரிய குழிவெட்டி இருந்தனர். கோபண்ணாவின் பிள்ளை சிறு குழந்தை பேச்சு வராத பருவம் தகளிர் நடையிட்டு வந்தவன் கொதிக்கும் கஞ்சியில் குமிழ்கள் எழுப்புவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குழிக்குள் எட்டிப் பார்க்க விளிம்புக்கு நகர்ந்தவன் தலைகுப்புற விழுந்து விட்டான்.

சமையல் முடிந்து சமையல் காரர்களும் பஜனையில் கலந்து கொள்ள சென்று விட்டதால் அந்த இடத்தில் எவருமில்லை. குழந்தையின் கதறல் நாமாவளி கோஷத்தில் எடுபடவில்லை. சாம்பிராணி நெருப்பு எடுக்க சமையல் பந்தலுக்கு வந்த கோபன்னாவின் மனைவி குழந்தை கஞ்சித் தொட்டியில் மிதப்பதைக் கண்டு அலறி தூக்கினாள். ஆனால் குழந்தை இற்ந்துவிட்டது.

கோபன்னாவின் மனைவி பொறுமையும் நிதானமும் கொண்டவள் சிந்தித்தாள் குழந்தை இறந்தது வெளியானால் பாகவதர்கள் பட்டினியோடு வீடு திரும்புவர் அண்டா அண்டாவாக தயார் செய்து வைத்திருக்கும் சித்திரானங்களும் அறுசுவை உணவும் பாழாகி விடும்.

அதோடு கோபண்ணா இத்தகைய பக்தியோடு வழிபட்ட ராமன் குழந்தையை காப்பாற்றவில்லை என்ற பழிச் சொல் வரும் பக்தி வளர்வது சமூகத்துக்கு நல்லது. குழந்தை திரும்பி வரப்போவதில்லை என்று தீர்மானித்தாள். பின்புறம் வேண்டாத சாமான்களை போட்டு வைக்கும் அறை ஒன்று இருந்தது. அதில் குழந்தையைக் கிடத்தி போர்வையால் மூடி கதவை தாளிட்டாள்.

பூஜை முடிந்தது. வந்தவர்களுக்கெல்லாம் வயிறார சாப்பிட்டு வாழ்த்தி தாம்பூலம் பெற்றுச் சென்றனர். மனைவியிடம் குழந்தையை நெடுநேரமாக காணோமே என விசாரித்தார் கோபன்னா. வருத்தத்தோடு விஷயத்தைச் சொன்னாள் இல்லாள்

கோபண்ணா குழந்தையை எடுத்து வந்து ராமன் முன் கிடத்தி ராமா இது என்ன சோதனை? சீதா பிராட்டியார் காணாமல் போனதற்கு நீ துடித்தாயே அவர்களைப் பிரிந்து வாழ்ந்த சோகம் நீ அறியாயோ? பேச்சை கொடுத்து மறுபடியும் ஊமை ஆக்குவதா உன்னை ஊரார் பழிப்பதைக் நான் கேட்க உயிரோடு இருக்க வேண்டுமா? இந்த சிறிய உயிருக்கு துணையாக இந்த பெரிய உயிரையும் எடுத்துக்கொள் என்று கதறினார். மனைவியும் கண்ணீர் சொரிந்தாள்.

அதிசயம் நிகழ்ந்தது. இராமன் அனுகிரகத்தால் குழந்தை புரண்டு படுத்தான். அப்பா அம்மா என்று அவன் மழலை காதில் தேனாகப் பாய்ந்தது. செய்தி ஊரெங்கும் பரவியது அதிசயத்தை ஊரே வியந்து பேசியது.

மற்றொரு சமயம் ராமனைக் காண தவித்த கோபண்ணா குருவான கபீரிடம் பலமுறை வேண்டினார். தொல்லை தாளாமல் ஒரு நாள் நாளை பகல் உச்சிப்பொழுதில் ராம தரிசனம் கிட்டும் என்று உறுதி அளித்தார்.

மகிழ்ச்சியோடு அவர் தன் மனைவியிடம் கூற விஷயம் ஊர் பூராவும் பரவியது. கபீர்தாசர் ராமபிரான் தன் வாக்கை மெய்ப்பிக்க பிரார்த்தித்தார். மறுநாள் காலையில் இருந்தே கோபண்ணா வீட்டில் கூட்டம் சேர ஆரம்பித்துவிட்டது.

வெயிலுக்காக வாசலில் போடப்பட்ட பந்தலில் பக்தர்கள் மிருதங்கம் ஜால்ரா உடன் பஜனை செய்தனர் பன்னீர் புஷ்பம் என சிலர் காத்திருந்தனர். நடுக்கூடத்தில் ஒரு ஆசனம் போட்டு அதோடு நின்றிருந்தனர்.

உச்சிவேளை எருமை ஒன்று வந்தது பக்தர்கள் அதை விரட்டினர் துளசி தட்டை தட்டி விட்டுச் சென்றது. ஸ்ரீராமபிரான் எருமை வடிவில் வந்தார் என்பதை கபீர் சொல்லி கோபண்ணா புரிந்துகொண்டு வருந்தினார்.

கோபண்ணாவின் தாய்மாமன்கள் அக்கன்னா மாதன்னா ஹைதராபாத்தில் மந்திரிகளாய் இருந்தனர். அவர்கள் உதவியால் பத்ராஜலம் தாசில்தார் வேலைகோபன்னாவுக்கு கிடைத்தது.

பத்ராசலம்ராமர் கோவில் மிகவும் சீர்கேடாக இருந்தது. அதை சீரமைக்க என்ன செலவாகும் என்று கணக்கிட்டு கணக்குபிள்ளையிடம் கூற சொன்னார் கோபன்னா.

6 லட்சம் பொன் என்று பதில் வந்தது. ஆறு லட்சம் பொன் வரிப்பணம் சேர்ந்திருந்தது. உடனே கோவிலை சீர்திருத்த உத்தரவிட்ட பிரகாரத்தில் இருந்து செடிகளும் புதர்களும் அகற்றப்பட்டு துளசியும் பூச்செடிகளும் நடப்பட்டன.

ராமாயணம் சித்திர வடிவில் சுவரெங்கும் அலங்கரித்தன தங்க கொடிமரம் வெயிலில் தகதகத்தது சிற்பிகளின் உளி சத்தம் கோதாவரியின் பேர் இரைச்சலையும் மிஞ்சியது. ஸ்ரீ ராம லட்சுமணர் சீதாபிராட்டி ஆபரணங்கள், ஆராதனைக்கு ஏற்ற பொற் பாத்திரங்கள் எல்லாம் தயாராயின.

கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது ஒரு வருடமாய் பத்ராசலத்திலிருந்து வரி பணம் வரவில்லை தானிஷா விசாரித்தார் ஏற்கனவே தூதனுப்பி மருமகனை எச்சரித்திருந்தனர் மாமன்மார். தூதன் எழுந்து கோபண்ணா பரசுராமர் கோவில் திருப்பணிக்காக வரிப்பணத்தை செலவிட்டதை கூறினர். கோபத்துடன் கைது செய்து அழைத்து வர உத்தரவிட்டார் தானிஷா.

நான்கு காவலர்கள் பத்ராசலம் வந்தனர் ஊர்மக்கள் சத்தியாகிரகம் செய்ய அவர்களை சமாதானப்படுத்தி சென்றார் கோபன்னா.

ராஜசபை

வரிப் பணத்தைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அரசு மக்களின் வரிப்பணம் தெய்வ பணிக்கு செலவழிந்தது உங்கள் ஆட்சியில் உள்ள ஆலயத்தை செப்பனிட வேண்டியது உங்கள் கடமை அல்லவா என்றும் தான் அதில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை என்று எடுத்துக் கூறினார் கோபண்ணா.

பேச்சு நியாயமாகப் படவில்லை தானிஷாவிற்கு இன்று கோபன்னாவிற்குக் கொடுத்தால் நாளை மற்றொருவன் வரிப் பணத்தை துஷ்பிரயோகம் செய்வான். கேட்காமல் செலவிட்டது குற்றமே என்று நினைத்தார்.

பணம் வரும் வரை அவரை இருண்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உணவில் சாததிற்கு சம அளவில் உப்பு போட்டு அவருக்குத் தரப்பட்டது. அப்போதாவது ரோஷம் வந்து பணம் கட்ட பார்ப்பார் என்றான் தனிஷா.

ஈரம் காய்ந்த தேங்காய் நார்களை முச்சந்தியில் நிறுத்தி கசையடி கொடுக்க ஆணை பிறப்பித்தார் அரசர். 30 அடியில் 10 பிழம்புகள் முறிந்தன ரத்தம் சொட்டியது. ராமா ராமா என்று அலறினார் கோபண்ணா. தலையிலே ஒரு பெரிய கல்லை ஏற்றி சுமந்து வரச்சொல்லி இழுத்துச் சென்றனர் காவலர்.

கைகளையும் கால்களையும் கட்டி கடலில் உருட்ட கட்டளையிட்டார் தான் இப்படி ஒரு நாள் ஒரு வாரம் ஒரு மாதம் ஒரு வருடம் அல்ல 12 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார் கோபண்ணா. எலும்புகள் கதையை கிழித்துக் கொண்டு வந்து விடுமோ என்று அஞ்சும் படி மெலிந்திருந்த கால்களுக்கு நடக்க வலுவில்லை கண்கள் குழிவிழுந்து இருந்தன. பார்வையில் ஒளியில்லை. நாடெங்கும் இவரைப்பற்றிய மக்கள் அங்கலாய்த்தனர்.

மானசிகமாக ஆராதனை செய்து கொண்டிருந்த கோபண்ணா புலம்பத் தொடங்கினார். ஹே ராமா சோதிப்பதற்கு ஒரு அளவில்லையா உன் பள்ளியறையில் பட்டு மெத்தை எனக்கு நாற்றம் பிடித்த அறையில் வாசம் உனக்கு திருவிழா நடத்த ஏற்பாடு செய்தவருக்கு வீதியில் சவுக்கடி.

சீதாதேவி உனக்கு செய்த வைரமுக்குத்தி ஜனகர் செய்தது இல்லை நீயாவது என் மீது கருணை காட்டும்படி பிரபுவுக்கு சொல்லக் கூடாதா நீ பத்து மாதம் அசோகவனத்தில் சிறை இருந்த நான் அதற்கு மேல் இந்த கேவலமான சிறையில் இருக்கிறேன்.

நான் செலவிடும் போது தடுத்திருக்கலாமே இப்போது வேடிக்கை பார்க்கிறாய் என்று கதறி அழுதார். வைகுண்டத்தில் சீதாபிராட்டி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இடம் இது தகுமோ என்று கேட்டாள் ராமன் தேவி கோபண்ணா முற்பிறவியில் என் பக்தன் ஒரு கிளியை பிடித்து 12 ஆண்டுகள் சிறையில் வைத்து இருந்தால் அதன் பலனே 12 வருடங்கள் சிறைவாசம். இன்று இரவோடு அது முடிகிறது என்றார்.

நள்ளிரவு ஸ்ரீராமன் லட்சுமணன் சிப்பாய் வேடத்தில் அந்தப் புறத்தில் நுழைந்தார். சிப்பாய்கள் உட்கார்ந்தபடியும் நின்றபடியும் தூங்கிக் கொண்டிருந்தனர். கதவுகள் எல்லாம் கை வைத்தவுடன் திறந்து கொண்டன.

தானிஷா அழகிய கனவு கண்டு கண் விழித்தான் தானிஷா. அருகில் ஸ்ரீராம லஷ்மணர்களை பார்த்து யார் நீங்கள் என்று பதறினார். அரசாங்கத்தில் இருந்து வருகிறோம் என் பெயர் ராமன்ஜி இவன் பெயர் லஷ்மண்ஜி என்றார்.

உங்களுடைய மாத சம்பளம் என்ன என்று கேள்விகளை அடுக்கினார் மன்னர் பரம்பரை பரம்பரையாக கோபன்னாவின் பணியாற்றுகிறோம் அவருடைய பக்தி எங்களை மகிழ்விக்கிறது நைவேத்திய பிரசாதம் எங்களின் சம்பளம்.

கடன் பணத்தையும் பக்தர்களிடமிருந்து நிலையைச் சொல்லி வசூலித்த பணம் சேர்ந்ததும் தாமதியாமல் புறப்பட்டோம் என்று கூறிய ராமச்சந்திர மூர்த்தி கொட்டினார் புதிய தங்க நாணயங்கள் தானிஷா பார்த்து சிரித்தன.

உங்கள் பணம் திரும்பி விட்டது. கோபன்னா அடைந்த வேதனையும் திருப்பி எடுத்துக் கொள்ள முடியுமா? எனக் கேட்டார் சரியாக இருக்கிறதா என்று எண்ணிக்கொண்டு சீக்கிரம் ரசீது கொடுங்கள் என்றார். இராம லட்சுமணர்ளிடம் என்னை மன்னியுங்கள் இரவு தங்கி காலையில் சாப்பிட்டு விட்டு கோபன்னாவுடன் போகலாம் என்றார் தனிஷா.

உங்கள் உபச்சாரத்திற்கு நன்றி ரசீது கொடுங்கள் என்று அவசர படுத்தினார் ராமபிரான் நள்ளிரவில் ரசீது எங்கே போவது? என்றார் மன்னர். மன்னரின் முத்திரை மோதிரத்தை அங்கிருந்த தாம்புல தட்டில் உள்ள தாம்பல சாற்றில் நனைத்து அதை அங்கவஸ்திரத்தில் பதித்துக் கொண்டார். ஸ்ரீராமரின் அழகை பருகியபடி மெய் மறந்து தானிஷா நிற்க அடுத்த நிமிடம் சிறை வாசலில் நின்றனர் இருவரும் காவலன் ஒருவன் இடம் விஷம் வாங்கி கஞ்சியில் கலந்த கோபண்ணா குடிக்கும் சமயம் கண்கள் மயங்க தூங்கிவிட்டார்

பத்ராஜல ராமதாசர்

லக்ஷ்மணர் அந்த விஷத்தை தட்டி விட்டு இந்த முத்திரை பதித்த உத்திரத்தை அருகில் வைத்து விட்டு வா என்றார் மயக்கம் தெளிந்து எழுந்த கோபன்னா் எனக்கு விஷம் குடிக்க கூட அதிர்ஷ்டம் இல்லையே என்று வருந்தினார்.

அங்கவஸ்திரத்தை யார் போட்டிருப்பார்கள் என்று குழம்பினார் அதேசமயம் தானிஷா தூக்கம் வராததால் மந்திரிகளை அழைத்து விஷயத்தைச் சொல்லி கோபண்ணா விடுவிக்கப் பட்டார். கோபன்னாவின் கால்களில் விழுந்து மன்னிக்க வேண்டினார் தனிஷா.

ஸ்ரீ ராம லட்சுமணர்களை தரிசனம் பெற்ற மன்னரின் பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். தங்களுக்கு தரிசனம் கிடைத்திருக்கிறது எனக்காக ராமன் மூட்டை சுமந்த என்று உருகினார். ராமனின் தாசரை அழைத்து வந்து வாசனை எண்ணை பூசி நீராடி அறுசுவை விருந்து பொன்னும் பொருளும் ஏராளமாகப் கொடுத்து பத்ராசலம் அனுப்பி வைத்தார்.

வழியில் கள்வர் வழிப்பறி செய்ய ஸ்ரீராமலட்சுமணர்களால் காக்கப்பட்டார். வானளாவிய கோபுரம் கட்டியது கோபன்னா தானிஷாவிற்கு சாமி தரிசனம் கொடுத்தது ஏன் என்று கேட்க போன பிறவியில் ஏழை அந்தணராக இருந்தான் தானிஷா விஸ்வநாதருக்கு ஆயிரம் கங்கை நீர் அபிஷேகம் செய்வதால் அரச பதவி கிடைக்கும் என்று 999 குடங்கள் திருமஞ்சனம் செய்து நம்பிக்கையற்று போய் 1000 குடத்தில் ஏமாற்று வேலை என்று லிங்கத்தின் தலையில்போட்டு உடைத்தான்.

ஆயிரம் தடவை படிகளில் ஏறி இறங்கியதால் சோர்வுற்று மயங்கி விழுந்து மடிந்தான். மறுபிறவியில் 999 குடத்துக்கு அரசனாகவும் தலையில் போட்டு உடைத்த பாவத்திற்கு முஸ்லிமாக பிறந்தான் ஸ்ரீராமரின் புண்ணிய தரிசனம் கிடைத்தது என்றார். ராம பக்தி பல்லாண்டுகளுக்கு செய்த பத்ராசல ராமதாஸர் ஐ-பொன் விமானம் வந்து வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe