ஏப்ரல் 21, 2021, 9:40 காலை புதன்கிழமை
More

  அரசு மருத்துவமனை: மின்விசிறிகளை இலவசமாய் பழுது பார்க்கும் தன்னார்வலர்!

  help - 2

  கொரோனா பரவலுக்கு முன், சிதம்பரம் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதுண்டு இங்குள்ள பிரசவ வார்டு, ஆண்கள், பெண்கள், வார்டுகள் உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

  நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகளில் பல இடங்களில் மின்விசிறிகள் ஓடாமல் இருந்து வந்தன.

  இதனை அறிந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத்குமார் மருத்துவமனை தலைமை மருத்துவரின் அனுமதியுடன், ஓடாமல் உள்ள மின்விசிறிகளை கழற்றி எடுத்துச் சென்று, அவரின் மாற்றுத்திறனாளி நண்பர் கணபதி மூலம் காயில் கட்டி, சரி பார்த்து மறுபடியும் மருத்துவமனையில் பொருத்தி வருகிறார்.

  கொரோனா தருணம் மட்டுமின்றி அதற்கும் முன்னரும் இச்செயலை வினோத்குமார் இலவசமாகவே செய்து வந்திருக்கிறார். இதுவரைக்கும் 80க்கும் மேற்பட்ட மின்விசிறிகளை இப்படி சரி செய்து வழங்கியுள்ளார்.

  வினோத்குமாரின் இந்த செயலை சிதம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

  “ஒரு மின்விசிறிக்கு காயில் கட்ட ரூ. 400 வரை தேவைப்படுகிறது. இதுகுறித்து நான் வாட்ஸ் அப்பில் பதிவு செய்கிறேன் என் தொடர்பில் உள்ளவர்கள் காயில் கட்டும் எனது மாற்றுத்திறனாளி நண்பர் கணபதிக்கு பணம் கொடுத்து விடுகிறார்கள்.

  பணம் கொடுத்தவர்கள் பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்கள். இதுபோன்று பலருடைய உதவியால் இந்தப் பணியை என்னால் செய்ய முடிகிறது” என்கிறார் வினோத்குமார்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »