லாக்டவுனால் திருப்பதியில் மாட்டிக் கொண்ட ரஷ்யப் பெண்; உள்ளூர் எம்.எல்.ஏ., உதவி!

Published:

russian lady - 2026
  • லாக்டௌனால் மாட்டிக்கொண்ட ரஷியன் இளம்பெண்.
  • கையில் பணமின்றி தாயிடமிருந்து தொலைவில் அவஸ்தைப்படும் ரஷ்யா யுவதி.
  • உதவிக்கு முன்வந்த எம்எல்ஏ பூமன கருணாகர ரெட்டி.

திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்காக திருப்பதிக்கு வந்த ரஷிய இளம்பெண் எஸ்தர் திருப்பதியில் பெரும் சிரமத்துக்கு ஆளானார். ஸ்ரீவாரி தரிசன பாக்கியமும் கிடைக்காமல் எடுத்து வந்த பணமும் செலவழித்து போய் உதவிக்காக எதிர்பார்த்திருந்தார்.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட திருப்பதி எம்எல்ஏ பூமன கருணாகர ரெட்டி அவருக்கு பணம் கொடுத்து உதவினார். ரஷ்யாவுக்கு திரும்பிச் செல்வதற்கு உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

ரஷ்யாவைச் சேர்ந்த எஸ்தர் (32) இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி தன் தாய் ஒலிவியாவோடு இந்தியா வந்தார். இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிகிறார். இவருக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகம். ஆலய அலங்கார கலையிலுல் நல்ல திறமை உண்டு.

சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபின் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களை சுற்றிப் பார்த்தனர். அதற்குள் கொரோனா தாக்குதல் அதிகமானதால் லாக்டௌன் விதித்தார்கள். வெளிநாட்டுக்குச் செல்லும் விமானங்கள் ரத்தானதால் திரும்பச் செல்லும் வாய்ப்பில்லாமல் போனதால் இந்தியாவிலேயே தங்கி விட்டார்கள்.

russian lady 1 - 2026

அந்த பின்னணியில் திருப்பதியில் ஶ்ரீவாரி தரிசனம் செய்து கொள்வதற்காக இந்த மாதம் 19ஆம் தேதி திருப்பதி வந்தார். கோவிட் காரணமாக வெளிநாட்டு பக்தர்களுக்கு ஸ்ரீவாரி தரிசன பாக்கியம் இல்லை என்று அறிந்து ஏமாற்றம் அடைந்தார். அதிகாரிகள் வாய்ப்பளித்தால் தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்திருந்தார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

அந்த நிலையில் இவரிடம் இருந்த பணம் செலவழிந்து போனதால் தாய் ஒலிவியா ரஷ்ய யாத்திரிகர்கள் அதிகமாக சுற்றிப் பார்க்க வரும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிருந்தாவன் நகர் சென்றடைந்தார்.

கோவிட் காரணமாக வெளிநாட்டு யாத்திரிகர்கள் வரவில்லை ஆதலால் அங்கும் அவருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. இந்தக் காரணத்தால் தாய் உத்தரப் பிரதேசத்திலும் மகள் திருப்பதியிலும் இருக்க வேண்டி வந்தது .

கையில் பணமின்றி தான் இருந்த ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு இஸ்கானில் தங்குமிடத்திற்காக முயற்சித்தார். அங்கு யாத்திரிகர்களுக்கு தங்குமிடம் அளிப்பதில் நிபந்தனைகள் இருந்ததால் இஸ்கானைச் சேர்ந்த சதா ராம்தாஸ் என்பவர் உணவு அளிக்கும் ஏற்பாடு செய்ய முடியும் என்றும் இருப்பிடத்திற்கு வேறு எங்காவது குடியிருக்க வாடகைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார் . ஆனால் கையில் பணமின்றி அலிபிரி சாலையில் அலைந்து வந்த நிலைமையை கவனித்த கபில தீர்த்தம் அருகில் உள்ள ஒரு ரெசிடென்சி இவருக்கு தங்குவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது.

எஸ்தர் செவ்வாய் அன்று ஊடகங்களிடம் பேசுகையில் தன்னிடம் தற்போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது என்றார். தாய் பணத்திற்காக உத்தரபிரதேசம் பிருந்தாவனம் சென்று அங்கேயே தங்கி விட்டார். அங்கு யாராவது ரஷ்யர்கள் இருந்தால் பண உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்தார்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

யாராவது உதவி செய்தால், தான் தாயோடு சேர்ந்து ரஷ்யா திரும்பச் செல்ல முடியும் என்று கூறினார். இலவசமாக உதவி செய்ய வேண்டாம் என்றும் தனக்கு தெரிந்த மருத்துவ சிகிச்சையை தேவையானவர்களுக்கு அளிப்பேன் என்றும் கூறினார்.

அவர் தங்கியிருக்கும் ரெசிடென்சி ஊழியர் பாண்டு பேசுகையில் அலிபிரி சாலையில் அலைந்து கொண்டிருந்தால் அவரிடமிருந்து விவரங்களை தெரிந்து கொண்டு இருக்கும் இடவசதி ஏற்பாடு செய்ததாகக் கூறினார். அவருடைய சிரமங்களை அறிந்து உதவ முன் வந்ததாக கூறினார்.

எஸ்தர் படும் சிரமங்களை அறிந்துகொண்ட திருப்பதி எம்எல்ஏ பூமன கருணாகர ரெட்டி உடனே உதவி செய்வதற்கு முன் வந்தார். தன் பிஏ ஆர் வெங்கடேஸ்வரலுவை அனுப்பி பண உதவி செய்தார்.

அரசாங்க விப், சந்திரகிரி எம்எல்ஏ செவி ரெட்டி பாஸ்கரரெட்டி அவரை செவ்வாயன்று நேராக சந்தித்து நம்பிக்கை அளித்து தன் கோட்டாவில் திருமலை ஶ்ரீவாரி தரிசனம் செய்விப்பதாக வாக்களித்தார். தன் சொந்த செலவில் ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக கூறினார். அதுவரை உணவுக்கு வசதி ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img