திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்து சமயத்தைச் சார்ந்த மற்றும் தமிழ்நாட்டை சார்ந்தவர்களிடம் இருந்து நவம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
பணி: Medical Officer – 02
சம்பளம்: மாதம் ரூ.75,000
பணி: Staff Nurse – 02
சம்பளம்: மாதம ரூ. 14000
பணி: Multi Purpose Hospital Worker / Attender – 02
சம்பளம்: மாதம் ரூ.6,000
வயதுவரம்பு: 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பெயரில் உள்ள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை நேரில் சென்று பெற்றும் பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணைய ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை – 606 601. தொலைபேசி எண்.04175-2524311
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.11.2021