தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லக்ஷ்மி மேனன்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட லக்ஷ்மி மேனன் தனது 15 வது வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சிறுமியாக இருந்த போதே , பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய லக்ஷ்மி மேனனுக்கு ஆரம்ப காலம் சிறப்பாகவே இருந்தது. இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு பிறகு மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்ற லக்ஷ்மி , இரண்டு ஆண்டுகள் படிப்பிற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளாராம். இதற்காக உடல் எடையை குறைத்து பல முயற்சிகளை செய்துள்ளார் லக்ஷ்மி மேனன்.
வெளிநாடு சென்று திரும்பியதன் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்யுமல்லவா! அதனால்தானோ என்னவோ மேலை நாட்டு நடனங்கள் ஆடுவதில் மிகுந்த முயற்சிகளை எடுத்து வருகிறார்.
சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார் லக்ஷ்மி மேனன். இன்ஸ்டா ரீல்ஸில் ஹிட் அடிக்கும் பல ஆங்கில ஆல்பம் சாங்கிற்கு நடனமாடி போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ள லக்ஷ்மி மேனன் , மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நடமாடி பதிவிட்டிருக்கிறார்.
அதற்கும் ஒரு படி மேலாக , ஓடும் மெட்ரோ ரயில் உள்ளேயும் meghan trainor பாடலுக்கு நடனமாடியுள்ளார். பார்ப்பதற்கு கிளிந்த ஜீன்ஸ் போல இருக்கும் டோர்ன் ஜீன்ஸ் மற்றும் டோர்ன் ஜீன்ஸை அணிந்து லக்ஷ்மி மேனன் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த ரயில் பெட்டிக்குள் லக்ஷ்மி மேனன் மற்றும் அவரை வீடியோ எடுத்தவர் என இருவரையும் சேர்த்து ஒரு சிலர் மட்டுமே உள்ளன. நட்சத்திர அந்தஸ்து கொண்ட லக்ஷ்மி மேனன் இது போன்று பொது இடங்களில் நடனமாடுவது அவரது ரசிகர்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது.
லக்ஷ்மி மேனன் தற்போது தமிழில் இரண்டு படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என மொத்தம் மூன்று படங்களை கையில் வைத்துள்ளார்.