spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்கனிமவளக் கொள்ளை; தமிழக அரசுக்கு 20 நாள் கெடு விதித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

கனிமவளக் கொள்ளை; தமிழக அரசுக்கு 20 நாள் கெடு விதித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

- Advertisement -

கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் 21வது நாள் பாஜக களமிறங்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு 1000 கோடிக்கு மேல் மதிப்புள்ள கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதற்கு எதிராக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவில், பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். 6000 பேருக்கு மேல் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் திரு அண்ணாமலை பேசியதாவது:

அன்பான பெரியோர்களே தாய்மார்களே, சூரியன் அஸ்தமனமாய் கொண்டிருக்கிறது, அதை கண் முன்னே பார்க்கும் பொழுது தமிழகம் எதை நோக்கி செல்கிறது என்பதை அவ்வப்போது இயற்கை நமக்கு உணர்த்துகிறது. இயற்கை நமக்கு ஒரு பாடத்தை எப்பொழுதும் உணர்த்தும். இப்பொழுதுதான் துருக்கி நாட்டில் ரெக்டர் அளவுகோலில் ஆறு புள்ளி மூன்று என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டு 45 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர். அந்த பூகம்பம் என்பது பூமி மேற்பரப்பில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அடியில் தான் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தும் பாரதப் பிரதமரின் உத்தரவின் பேரில் மீட்பு குழு சென்ற மீட்பு பணிகளை மேற்கொண்டது. அங்கு பூகம்பத்தால் ஏற்பட்ட அந்த காட்சிகளை பார்க்கும் பொழுது அனைவரின் கண்களில் கண்ணீர் வரும். பூமி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

“செஸ்பிக் ஜோன் 5″ என்றால் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடம் என்றும் ‘செஸ்பிக் ஜோன் 1” என்றால் பூகம்பம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் அர்த்தம். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், தண்ணீர், எப்போதும் பசுமை என இயற்கை அன்னை வளங்களை வாரி வழங்கி உள்ள பகுதி என்ற போதிலும், சீஸ்பிக் ஜோன் 4/3 பகுதியாக இருக்கிறது.. அதாவது பூகம்பம் ஏற்படக்கூடிய பகுதி என்று கண்டறியப்பட்டுள்ளது.

 ஏன் இதை தற்பொழுது உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் என்றால் 1900, அதாவது சுமார் 123 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை பள்ளி என்ற இடத்தில் அதாவது இங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. ஒரே இரவில் 9 ஆயிரம் பேர் இறந்தனர். இங்கு இருக்கும் குவாரி பகுதிகளை சென்று பார்த்தல், சுதந்திரம் வாங்கிய 1947- க்கு பின்பு சுமார் 73 ஆண்டுகளில் ஒரு 60 முதல் 75 அடிகள் வரை தோண்டப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல குவாரிகள் 150 அடி 180 அடி 200 அடி 220 அடி வரை தோண்டப்பட்டுள்ளது.. 

இதன் பாதிப்பு அடுத்த பத்து ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகளில் கழித்து தான் உணர முடியும். அப்படிப்பட்ட ஒரு கொள்ளை கூட்டத்தை தடுத்து நாம் இங்கு ஒன்று கூடி இருக்கிற�ோம். நமது சந்ததியை பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை என்பதால் இங்கு நமது நேரத்தை கொடுத்து இங்கு கூடியிருக்கிற�ோம். பூமியை கீழே தோண்ட தோண்ட வெப்பம் மேலே வந்து கொண்டே இருக்கும். வெப்பம் மேலே வர வர இந்தப் பகுதியில் இருக்கும் குளிர்ச்சி, பசுமை தண்ணீராதாரங்கள் அனைத்தும் இன்னும் 15 ஆண்டுகளில் காணாமல் போய்விடும். 

இதை ஏன் சொல்கிறீர்கள் என்றால் அப்படிப்பட்ட பகுதியில் வாழ்ந்து, எங்கள் பசுமை வளத்தை விட்டுக் கொடுத்துவிட்டு கிட்டத்தட்ட வறட்சி பிரதேசமாக மாறி இருக்கும் அரவக்குறிச்சியில் இருந்து வந்திருக்கும் மைந்தனாக இதை நான் சொல்கிறேன். இப்பொழுது இங்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அது 15 ஆண்டுகளுக்கு முன் அரவக்குறிச்சியில் நடந்தது. 

இன்று அரவக்குறிச்சியில் நிலைமை 15 ஆண்டுகள் கழித்து இந்தப் பகுதியில் ஏற்படும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் கண்ணுக்குத் தெரியாத பொருட்களில் தான் அதிக திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர். 

பீகார் ஜார்க்கண்ட்போன்ற வட இந்திய மாநிலங்களில் 1980 90களில் நிலக்கரி ஊழலில் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்கள் இன்று சிபிஐ கைது செய்து கொண்டிருக்கிறது… தமிழகத்தில் நிலக்கரி இல்லை. ஆனால் இந்த பொள்ளாச்சி கிணத்துக்கடவு மதுக்கரை போன்ற பகுதிகளில் நிலக்கரிக்கு பதிலாக மண் கல் போன்ற இயற்கை வளங்கள் உள்ளன. இதை கண்முன் ஒரு கூட்டம் சுரண்டி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. 

73 ஆண்டு காலத்தில் சுரண்டப்பட்டதை விட இந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் இரு மடங்கு இங்கு இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இப்படியே சென்றால் உங்கள் குழந்தைகள் வெப்பம் அதிகம் உள்ள பகுதியில், விவசாயம் செய்ய முடியாத பகுதியில், தண்ணீர் இன்றி வறண்டு போன பகுதிகளில் அவர்கள் வாழ வேண்டி வரும். அதனால் சில விஷயங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. 

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். தமிழக அரசின் மொத்த வருவாய் என்பது லட்சத்து 80 ஆயிரம் கோடி. கனிம வளங்களில் இருந்து அரசு காட்டக்கூடிய வருமானம் என்பது வெறும் 900 கோடி மட்டுமே. இதிலிருந்து எப்படி கனிம வளத்தில் கொள்ளையடிக்கிறார்கள் என்பது நமக்கு புரிந்துவிடும். ஒரு லாரியில் பன்னிரண்டு யூனிட்டுகள் கனிம வளங்கள் செல்கிறது என்றால் அதில் மூன்று முதல் நான்கு யூனிட் கனிம வளம் மற்றும் கற்களுக்குத்தான் கனிம வளத்துறைக்கு அதற்கான தொகை செல்கிறது. ஐந்தாவது யூனிட் முதல் 12 வது யூனிட் வரை அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் கிடையாது. தனியார் மாஃபியாக்கள் மாநில எல்லையோரங்களில் செக்போஸ்ட் அமைத்து உட்கார்ந்து ஒவ்வொரு குவாரிக்கும் ஒரு மேலாளரை வைத்துக்கொண்டு அவர்களுக்கு 400 ரூபாய் கட்ட வேண்டும் என சொல்லி அந்த வளத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இப்படி ஒரு பக்கம் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்க, லாரிகளால் சாலைகள் குன்னம் குழியுமாக ஆக்கப்படுகிறது. இந்த சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் இறப்பவர்கள் சாதாரண மக்கள் மட்டும் தான். வி பி அண்ட் கோ என்ற ஒரு நிறுவனம் , தமிழக அரசு கனிம வளத்துறை கொடுப்பது போலவே ஒரு ட்ரிப் ஷீட் அடித்து, கிரஷர் உடைய பெயர், உரிமையாளர் யார், வாகன எண், எத்தனை யூனிட்டுகள் ஏற்ற வேண்டும், ட்ரான்சிட் பாஸ் வாங்கப்பட்டுள்ளதா, கேரளாவுக்குள் எத்தனை மணிக்கு செல்ல வேண்டும் , சூப்பர்வைசர் யார், செக்போஸ்டில் இதை ஆய்வு செய்வது யார் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் அச்சடித்து கொடுக்கப்படுகிறது. 

இது உற்று நோக்கினால் அரசு அடித்த ட்ரிப் ஷீட் போலவே இருக்கும் ஆனால் இது தனியா மாபியா கும்பல் அடித்திருக்கும் ட்ரிப் ஷீட் என்பது நமக்கு உற்று நோக்கினால் தான் தெரியும். நமக்கும் கேரளாவுக்கும் இருக்கும் 11 செக் போஸ்ட்களில் இந்த மாபியா கும்பலே ஆட்களை நியமனம் செய்து, இந்த வளங்களை கடத்துகின்றனர். அப்படி எவ்வளவுதான் நமக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று ஒரு கணக்கு பார்த்தால், குறிப்பாக இந்த மாவட்டத்திற்கு மட்டும் பார்த்தால் ஒரு நாளைக்கு 1500 லாரிகள் இப்படி கனிம வளங்களை ஏற்றி செல்கின்றன. 

ஒரு லாரிக்கு அனுமதித்த எடையை விட 8 யூனிட்டுகள் எடுத்தால் கிட்டத்தட்ட 12,000 யூனிட்டுகள் அரசுக்கு வருமானம் இல்லாமல் கோபாலபுரத்தை சார்ந்த ஒரு தனியார் மாபியா கும்பலான விபி அண்ட் கோ நிறுவனத்திற்கு மட்டும் கப்பம் கட்டி விட்டு, நமது வளமான மண் கேரளாவுக்கு சென்று கொண்டிருக்கிறது. கேரளா அரசு ஒரு ஆற்றில் சென்று நீங்கள் திருட்டு மணல் எடுத்தால் அங்கு உங்கள் மேல் குண்டர் சட்டம் போடப்படும். கேரளாவில் எங்கே சென்றும் யாரும் மண் அல்ல முடியாது, ஜல்லி உடைக்க முடியாது, லாரிகளில் நான்கு யூனிட் க்கு பதிலாக 12 யூனிட்டுகள் ஏற்றி செல்ல முடியாது. 

கேரளா அரசுக்கு தன் நிலத்தை காப்பாற்றி கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது. கேரளாவுக்கு தேவையான அத்தனை ஜல்லிகளையும் மணல்களையும் தமிழ்நாட்டில் இருந்து உடைத்து, இங்கு இருக்கும் மாபியா கும்பல் உதவியுடன் கேரளாவுக்கு எடுத்துச் செல்கிறது. கேரளாவில் ஒரு கோழி கழிவை கூட பொள்ளாச்சி கோவை பல்லடம் போன்ற பகுதிகளுக்கு கொண்டு வந்து தான் கொட்டப்படுகின்றன. 

தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அதாவது நம் கேரளா கம்யூனிஸ்ட் அரசுடன் ஒரு உறவை வைத்துக் கொள்வோம். நாளை 2024 ஆம் தேர்தலில் நமக்கு சில எம்பிக்கள் கிடைத்தால், கம்யூனிஸ்டுகளுக்கு அங்கு சில எம்பிக்கள் கிடைத்தால் 2024 ஆம் ஆண்டு துணை பிரதமர் என்ற பதவி நமக்கு கிடைத்து விடாதா என்ற நப்பாசையில் கேரளாவுக்கு தமிழகத்தின் கனிம வளங்களை வேண்டுமென்றே விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி நமது சந்ததியர் இங்கு வாழ முடியும்.  

அதனால்தான் நமது விவசாய பெருமக்கள் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இதை தடுத்து நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இரண்டு ஆண்டு காலமாக பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது . இந்தப் பகுதி உள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள். 

இரு தினங்களுக்கு முன்பு கூட கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு வசந்த ராஜன் கனிம வளம் கடத்திய லாரியை சிறைப்பிடித்து கொடுத்துள்ளார். வேறு வழியில்லாமல் மூன்று லட்ச ரூபாய் அபராதம் மட்டும் விதித்துள்ளார்கள். இதை நாம் இப்படியே விட்டுக் கொண்டிருக்க முடியாது. ஒரு நேரத்தை, ஒரு காலத்தை உடனடியாக முடிவு செய்ய வேண்டும். அந்த காலத்துக்குள் இந்த கடத்தல் நிறுத்தப்படவில்லை என்றால், அரசியல் கட்சியான நாம் பொதுமக்களுடன் இணைந்து இதை தடுத்து நிறுத்த வேண்டும். 

எப்பேர்ப்பட்ட கொம்பன் ஆனாலும் நம்மை தாண்டி தான் செல்ல வேண்டும். அரசியல் கட்சிகள் வெறும் ஆர்ப்பாட்டம் மட்டும் செய்வார்கள். பிறகு ஆறு மாதத்திற்கு எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடக்கூடாது. எனவே இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முடியும் முன்பு நாம் தெளிவாக ஒரு குறிக்கோளோடு ஒரு குறிப்பிட்ட தேதி க்குள் இந்த கடத்தலை தமிழக அரசு தடுக்கவில்லை என்றால் பாரத ஜனதா கட்சியின் தொண்டர்கள் ஷிப் போட்டு அமர்வார்கள். இப்படி பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு செக்போஸிலும் ஷிப்ட் அடிப்படையில் அமர்ந்து கனிம வளம் கடத்தப்படும் லாரிகளை அந்த பகுதி கிராம மக்களின் துணையோடு சிறைப்பிடித்தால், ஆளும் தமிழக அரசு நடை பிணத்திற்கு சமமாகிவிடும். பாரதிய ஜனதா கட்சி எண்ணி இன்னும் இருபது நாட்கள் தமிழக அரசுக்கு கொடுக்கின்றோம்.

 20 நாட்களுக்குள் உங்கள் ஆர்டிஓ உங்கள் காவல்துறை உங்கள் கனிமவளத்துறை, இப்போது சென்று விபி அண்ட் கோ போன்ற மாபியா கும்பலை அப்புறப்படுத்த வேண்டும். பொள்ளாச்சி மதுக்கரை ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த மாபியா கும்பலை விரட்ட வேண்டும். 20 நாட்களுக்குள் இதை தமிழக அரசு செய்யவில்லை என்றால் 21 வது நாள் இந்த மாவட்ட தலைவர் சொல்லும் செக் போஸ்டில் மாநில தலைவராக நான் வந்து அமர்ந்து இந்த கனிம வள கடத்தலை தடுக்க போகிறேன். 

தேவைப்பட்டால் கோவை நகர் திருப்பூர் போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும் பாரதி ஜனதா தொண்டர்களை அழைத்து வந்து மூன்று ஷிப்டாக இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோம். இந்தப் பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்திருப்பது இதை முடித்து காட்டுவோம் என்பதற்காக தான். 

விவசாய பெருமக்களும் பொதுமக்களும் இந்த கட்சி பவரில் இல்லாத போதே இவ்வளவு நல்லது செய்கிறார்கள் என்றால் இந்த கட்சிக்கு ஒரு எம்பியோ அல்லது ஒரு எம் எல் ஏ ஓ கொடுத்தால் இன்னும் நன்றாக செயல்படுபவர்கள் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டியது பாரதிய ஜனதா கட்சியின் கடமை. ஒரு நாட்டோட வளர்ச்சிக்கு குவாரி தேவைதான். ஆனால் அங்கிருந்து எவ்வளவு வளங்கள் வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்கான சட்டங்கள் இருக்கின்றன. அதனால்தான் 75 ஆண்டுகளில் வெறும் 50 அடி 60 அடி 70 அடி மற்றும் தோண்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் 150 அடி 200 அடி தோண்டி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மதுபானம் அருந்திய குரங்கை தேள் கொட்டினால் அதன் மனநிலை எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் திமுக அரசு மக்கள் நலதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கிறது. 

ஒரு குடும்பத்திற்காக அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக செயல்படும் இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். திமுக அரசியல் செயல்பாடுகளை ஈரோடு இடைத்தேர்தல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அதாவது இருக்கும் வரை கொள்ளையடி. அதுவும் கண்ணுக்குத் தெரியாத கனிம வளம் மற்றும் மதுபானம் ஆகியவற்றில் கொள்ளையடி. அந்த பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம். இதுவரைக்கும் ஆட்டுக்கு மட்டுமே பட்டி போட்டு இருந்ததை பார்த்த மக்கள், தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்களுக்கு பட்டி போட்டதை பார்த்து விட்டார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் 228 பூத்துகளிலும் ஒரு பட்டி போடப்பட்டிருக்கிறது. காலை 8 மணிக்கு ஒவ்வொரு பட்டியிலும் 150 முதல் 200 பேரை உட்கார வைத்துவிட்டு விட வேண்டியது. அந்தப் பட்டிக்குள் வருவதற்கு ஒரு பணம் மதியம் சாப்பாடு. செல்லும் போது மீண்டும் ஒரு பணம் கொடுக்கிறார்கள். இது தினமும் கிட்டத்தட்ட 20 நாட்களாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

ஒருவேளை பட்டிகளுக்கு மக்கள் வராத நேரத்தில் ஒரு திமுக உறுப்பினர் அந்த வீடு கதவைத் தட்டி, குடல் கறி அல்லது சிக்கன் போன்றவற்றை கொடுத்துவிட்டு செல்கின்றனர். அது மட்டும் அல்லாமல் வாக்காளர்களுக்கு பட்டுப்புடவை, வெள்ளி குடம், வெள்ளி தட்டு, கம்மல் உள்ளிட்ட பொருட்களும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு. 

இந்தியாவின் திரிபுரா நாகலாந்து மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஒரு மாநிலத்தில் ஏற்கனவே நடந்த முடிந்திருக்கிறது, இரண்டு மாநிலங்களில் 27 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் கிட்டத்தட்ட பின் தங்கிய மாநிலங்களாக இருக்கக்கூடிய வட கிழக்கு மாநிலங்கள். 

ஒரு பக்கம் தமிழகம் முன்னேறிய மாநிலம், மற்ற மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன என்று சொல்கிற�ோம் ஆப்பிரிக்காவில் சில மிகவும் பின் தங்கிய நாடுகளில் கூட மக்களை பட்டியில் அனைத்து வைத்திருக்கக்கூடிய அவலத்தை நாம் பார்த்திருக்க முடியாது. திமுகவுக்கு என்ன தைரியம் என்றால் இந்த கனிம வளம் மற்றும் மதுபானத்தில் இருந்து வரும் பணத்தை மக்களுக்கு கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று அசத்த தைரியம் மட்டும்தான். 

திமுக தலைவர் நமது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எவ்வளவு பயம் இருந்தால் பிரச்சாரத்தின் கடைசி நாளில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை எப்பொழுது கொடுக்கப்படும் என்பதை இந்த பட்ஜெட்டில் அறிவிப்போம் என்று கூறியிருப்பார். இங்கே இருக்கும் சகோதரர் சகோதரிகள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மாநில அரசு உங்களுக்கு கடனாளி தான். 

ஆட்சிக்கு வந்த பொழுது மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தால் 22 மாதங்களில் 22,000 உங்களுக்கு வந்திருக்க வேண்டும். கேஸ் சிலருக்கு நூறு ரூபாய் மானியம் கொடுத்திருந்தால் 22 மாதத்திற்கு 2200 வந்திருக்கும். மொத்தமாக 24,200 ரூபாய் உங்கள் வங்கி கணக்கு வந்திருக்க வேண்டும். அடுத்த மாதம் என்றால் மேலும் அது அதிகமாகும். இன்றும் 13 மாதங்களில் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. தமிழகத்தை நாம் நினைத்து பார்த்த அளவுக்கு மாற்றக்கூடிய வாய்ப்பு நமது கைகளில் இருக்கிறது. 

இது திமுகவுக்கு தெரிந்து விட்டது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து பாரதி ஜனதா கட்சியை நீங்கள் டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் உங்களுக்கு வந்திருக்கிறது. பாரத ஜனதா கட்சி விழித்திருக்கும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்தையும் பாருங்கள். தேயிலைத் தோட்ட நண்பர்களுக்காக கூடலூர் ரயில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மாநில அரசு அந்த அரசாணை திரும்ப பெற்றுள்ளது, அதன் பின்பு அன்னூரில் விவசாயிகளின் நிலத்திற்காக நாம் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அந்த அரசாணையையும் திரும்ப பெற்றுள்ளது, தமிழக அரசு செய்யும் பல்வேறு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிட்ட பிறகு அந்த அரசாணைகளையும் திரும்ப பெற்றுள்ளது. 

இது அத்தனையும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் நான்கே எம்எல்ஏக்களை மற்றும் சொற்ப கவுன்சிலர்களை வைத்துக்கொண்டு செய்திருக்கிற�ோம். தமிழக மக்கள் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு தர வேண்டியது அதிகாரம் எனும் ஒற்றை வார்த்தையை மட்டும் தான். 2024- ம் ஆண்டு மோடி ஐயா அவர்களின் ஆட்சி 400 எம்பிக்களுடன் அமையும். அதில் தமிழகத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நமது சகோதர சகோதரிகள் சென்று அமர வேண்டும். ஒரு கனிமவள கொள்ளை தடுப்பதற்காக ஒரே நாள் அறிவிப்பில் சுமார் 8000 பேர் இங்கு கூடியிருக்கிறீர்கள். 

உங்கள் ஆதரவு தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு அளித்திட வேண்டும். இந்த கனிமவள கொள்ளை பொறுத்தவரை இன்னும் 20 நாட்கள் அரசுக்கு நேரம் கொடுக்கிறோம். அதை அவர்கள் தடுக்கவில்லை என்றால் 21 வது நாள் முதல் லாரியை முதல் ஆளாக நான் தடுத்து நிறுத்துவேன். இப்போதைய தமிழக அரசுக்கும் டிஜிபி அவர்களுக்கும் அறிவித்து விடுகிறோம். நீங்கள் ராணுவத்தை போல அனைத்து போலீஸ் காரர்களையும் எல்லையில் நிறுத்தினாலும் கனிம வள கொல்லையில் ஈடுபடும் லாரிகளை நாங்கள் கட்டாயம் தடுத்தே தீருவோம். கனிம வள கொள்ளையால் அந்தப் பகுதியே பாலைவனமாக மாறிவிடும். பசுமையாக இருக்கும் பொள்ளாச்சி பகுதியை தேடி பல மக்கள் வருகின்றனர்.

திமுகவின் உதயநிதி ஸ்டாலின் கூட ஷூட்டிங்காக இங்கே தான் வருகிறார். அதற்காகவாவது பொள்ளாச்சி பகுதி பசுமையாக இருக்க வேண்டும். எனவே திமுக அரசு பொதுநலமாக சிந்திக்க விட்டாலும் சுயநலமாகவாவது சிந்தித்து இந்த பசுமையை காப்பாற்ற வேண்டும். இப்பொழுது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நாம் கலைந்து சென்றாலும் 21வது நாள் மீண்டும் ஒன்று கூடி கனிமவள கொள்ளை தடுப்போம் என்று கூறி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

செய்தித் தொகுப்பு: – மணிக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe