
இனி கடைகள், வங்கிகள் போன்ற இடங்களில் மக்கள் வருவதை தடுக்க முடியாது. இந்த நிலையில், பிரிட்டனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, சமூக இடைவெளியை உறுதி செய்ய, ஒரு பழைய தொழில்நுட்பத்தை, புதிய கோணத்தில் பயன்படுத்தியிருக்கிறது.
கடை வாசலில், ‘உள்ளே வரலாம்’ என்ற பச்சை விளக்கு மற்றும் ‘உள்ளே வராதீர்’ என்ற சிவப்பு விளக்கு கொண்ட தானியங்கி அறிவிப்பு கருவியை பொருத்தியுள்ளது. இந்தக் கருவி, கடைக்குள், ஒரே சமயத்தில் எத்தனை பேர் வரலாம் என்பதை எண்ணி உள்ளே விடுகிறது.
உள்ளே சென்றோர் வெளியேறியதும், அதை உணரிகள் மூலம் அறிந்து, அடுத்து அடுத்து ஐந்தாறு பேரை உள்ளே விடுகிறது.இது வங்கிகளில், ‘டோக்கன்’ தரும் முறையை ஒத்திருந்தாலும், நுழை வாயிலிலேயே இதை பொருத்துவதால், சமூக இடைவெளியை கடைகள், வங்கிகள் போன்ற இடங்களில் உறுதிசெய்ய முடியும்.