
அத்துமீறும் சீன ராணுவத்தை கண்டித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் மதுரையில் சீன கொடி எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்
தேசிய மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மதுரை கிளை சார்பாக இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் முனிச்சாலை சந்திப்பு அருகில் இந்திய சீன எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சீன அரசின் அக்கிரமங்களைக் கண்டிக்கும் வகையில் சீன தேசிய கொடியும் சீன அதிபரின் உருவபடமும் தீயிட்டு எரிக்கப்பட்டது. சீனாவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ABVP யின் மாநில இணை செயலாளர் கோபி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் .வெங்கட் ராஜ் அலுவலக செயலாளர் கருப்பசாமி சட்டக்கல்லூரி பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது போல், மதுரையில் மேலமடை பாரதிய ஜனதா கட்சி சார்பில் சீன அதிபரின் உருவ படத்தை செருப்பால் அடிக்கும் போராட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமிறீ தாக்குதலில் ஈடுபட்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைக் கண்டிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமையில், சீன அதிபரின் உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் போராட்டத்தை நடத்தினர். இதில் பாரதிய ஜனதா கட்சியினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை