பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் பதில்

Published:

SENGOTTAIAN
SENGOTTAIAN

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளி பாடத் திட்டங்களை குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பற்றி எந்த புகார்களும் வரவில்லை. ஏதேனும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img