
தமிழகத்தில் இன்று புதிதாக 477 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பதால், தமிழகத்தில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 477 பேரில் 93 பேர் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்று, அதனால் சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புபவர்களை உடனடியாக சோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்துவதால் நோய்த் தொற்று பரவுவது குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்!
இதுவரை 10 விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து பலர் தமிழகம் திரும்பியுள்ளனர் என்றும் அவர்களை தனிமைப்படுத்தி, நோய்த் தொற்று இல்லை என உறுதிப் படுத்திய பிறகுதான் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
- ‘சென்னையில் 6 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு’
- தமிழ்நாட்டில் இன்று 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவிலிருந்து வந்த 81 பேருக்கு இன்று கொரோனா உறுதி.
- பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி.
- கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக புதிதாக பாதிப்பில்லை.
- திருச்சி, அரியலூர், இராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பில்லை.
- இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 939 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
- சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000ஐ கடந்துள்ளது.
- தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்வு.
- சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
- சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6278ஆக அதிகரிப்பு.
- தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு.
- தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு.


