மனைவி கொடுத்த ஐடியா! கணவன் மீது கார் ஏற்றி கொன்ற கள்ளக் காதலன்!

இந்தியா கிரைம் நியூஸ்
Screenshot 2020 0516 194953 - 2026

புதுச்சேரி: “இவன் டார்ச்சர் தாங்க முடியல.. கதைய முடிச்சிடு.. அப்பதான் நாம ஜாலியா இருக்க முடியும்னு புவுனா சொல்லுச்சு.. அதனாலதான் அவ புருஷனை கார் ஏத்தி கொன்னேன்” என்று புவனேஸ்வரியின் கள்ளக்காதலன் வாக்குமூலம் தந்துள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் கந்தசாமி.. 41 வயதாகிறது.. பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.. இவரது மனைவி புவனேஸ்வரி… கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகிறது. 7 வயதிலும் 4 வயதிலும் 2 மகன்கள் உள்ளனர்.

லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்த அஜித்குமார் என்கிற ஸ்ரீதர், என்பவர் கந்தசாமியின் நண்பர்.. அவரும் டிரைவர்தான்.. அவருக்கும் கல்யாணம் ஆகி குழந்தை உள்ளது.. நண்பனை பார்க்க அடிக்கடி வீட்டுக்கும் வந்து போகவும் புவனேஸ்வரி ஈர்த்துவிட்டார்..

கள்ளக்காதல் ஆரம்பமாகிவிட்டது.. ஏகப்பட்ட கிப்ட்களை வாங்கி தந்து அசத்தவும், அவர் அஜித்குமாரிடம் விழுந்தே விட்டார்.

விஷயம் கந்தசாமிக்கு தெரிந்ததும் மனைவியை கண்டிக்க, அவரோ கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டார். இந்நிலையில், கடந்த மார்ச் 14-ம் தேதி, கந்தசாமி பைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் இந்த விபத்து பற்றி விசாரித்தபோதுதான், புவனேஸ்வரி விஷயம் தெரியவந்தது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு, கந்தசாமி அவரது அம்மாவிடம் அழுதுபுலம்பி உள்ளார்.. அது சம்பந்தமான ஆதாரமும் போலீசாருக்கு தரப்பட்டது.. இதையடுத்துதான் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் புவனேஷ்வரியும், ஸ்ரீதரும் சேர்ந்து இந்த கொலையை செய்ய பிளான் செய்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக கார் ஏற்றி கொன்ற அஜித்குமாரின் நண்பர் பிரவீன்குமார் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தது.

கந்தசாமியின் அம்மாவிடம் பேசிய மரணவாக்குமூலம் போல இருந்த அந்த ஆடியோதான் இவ்வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.. அதில், “அம்மா இப்போ நான் பேசறது கடைசியா கூட இருக்கலாம்.. இதுக்கப்புறம் நான் உயிரோட இருப்பேனான்னு தெரியல.. ஒருவேளை செத்து போயிட்டா அதுக்கு காரணம் புவனாவும்,ஸ்ரீதரும்தான்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, கார் டிரைவர் பிரவீன்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “காரை ஏத்தி கொல்லணும்னு ஸ்ரீதர் (அஜித்குமார்) கேட்டதாலதான் 2 பேரும் அதை செய்தோம்” என்றார். இதற்கு பிறகு அஜித்குமார் சொல்லும்போது, “புவனாவுக்கு 28 வயசு.. கந்தசாமி வீட்டுக்கு போகும்போதுதான் பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்து புவனாவை கந்தசாமி திட்டினார்.. அடிக்கடி சண்டை போடுவார்.. புவனேஸ்வரியும் திருப்பி சண்டை போடுவார்..

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

அப்போதும் எங்கள் உறவு நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் யாருடனும் பேசக்கூடாது என்று கந்தசாமி டார்ச்சர் செய்யவும் புவனாவுக்கு எரிச்சல் ஆகிவிட்டது.. “இவன் தொல்லை தாங்க முடியல.. அவன் கதைய முடிச்சிடு.. அப்பதான் நாம ஜாலியா வாழ முடியும்”ன்னு என்கிட்ட புவனா சொல்லுச்சு.. அப்பறம்தான் என்ஃபிரண்ட் கிட்ட ஹெல்ப் கேட்டு, கார் ஏத்தி கொன்றோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.