போட்ஸ்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில் ஒரு மலைப்பாம்பு மற்றும் கழுதை புலிக்கு நடுவில் மாட்டிக் கொண்ட ஒரு குட்டி மானின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது
ஒரு குட்டி மான் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. அதனை பார்த்த மலைப்பாம்பு மான் குட்டியை நோக்கி வேகமாக நெருங்குகிறது.
மற்றொரு பக்கம் மான் குட்டியை பார்த்த கழுதை புலியும் அதனை நோக்கி நெருங்கி வருகிறது. அந்த குட்டி மானை மலைபாம்பு சுற்றிவளைத்துகொண்டது.
மலைபாம்பிடம் மாட்டிக்கொண்ட மான் குட்டியை இழுத்துச் செல்ல கழுதைப்புலி முயல்கிறது. மான்குட்டியை மலைப்பாம்பு கொன்றது. அதனிடமிருந்து கழுதை புலி மான் குட்டியை பிடுங்க முயற்சித்ததால், வேறு வழியின்றி, மலைப்பாம்பு குட்டி மானை விட்டுவிட்டு சென்றது.
அதன்பிறகு கழுதைபுலி, மான் குட்டியை தூக்கிக்கொண்டு ஓடுகிறது. அதனைத்தொடர்ந்து, அந்த குட்டியை முழுமையாகத் தின்றுமுடித்தது.