இந்தியா – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் மேட்ச் – 5ம் நாள் – 5.07.2022
இங்கிலாந்து அணி வெற்றி
- K.V. பாலசுப்பிரமணியன்
நேற்று நான்காம் ஆட்ட முடிவில், வெற்றிக்கு 119 ரன் எடுக்கவேண்டும் என்ற நிலையில் 57 ஓவரில் 259/3 என்ற ரன் கணக்கோடு இங்கிலாந்து அணி இன்று ஐந்தாம் நாள் ஆடத்தொடங்கியது. பும்ராவின் அதிர்ஷ்டம் எதுவும் வேலை செய்யவில்லை.
இன்று 19.4 ஓவர் விளையாடி விக்கட் எதனையும் இழக்காமல் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று. தொடரைச் சமன் செய்தது. ஜோ ரூட் 142 ரன்களுடனும் ஜானி பெயர்ஸ்டோ 114 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதி ஸ்கோர் இந்தியா 416 மற்றும் 245; இங்கிலாந்து 284 மற்றும் 378/3. ஆட்ட நாயகன் ஜானி பெயர்ஸ்டோ; இந்திய அணியின் தொடர் நாயகன் 23 விக்கட்டுகள் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா; இங்கிலாந்து அணியின் ஆட்டநாயகன் ஜோ ரூட்(அவர் எடுத்த 737 ரன்களுக்காக)
இனி T20 தொடர் ஆரம்பமாகிறது.