IMG 20220705 WA0077 - 2026

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை காண்ட்ராக்டர் க்கு 15 ஆண்டு சிறை ..

சற்றுமுன்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை காண்ட்ராக்டர் க்கு 15 ஆண்டு சிறை தண்டனை 25 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

IMG 20220705 WA0077 - 2026

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ளது மேட்டுப்பட்டி அந்த ஊரைச் சேர்ந்தவர் பிச்சை மாரி வயசு 42 இவர் கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார் இவர் கடந்த 13 1 2019 அன்று 13 முதல் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது பற்றி வந்த புகார் அடிப்படையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிச்ச மாரியை கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லி புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற
நீதிபதி பிச்சமாரிக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார் மேலும் பாதிக்கப்பட்ட 13 சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.