
மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் செயல் படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது:
அம்மாவின் அரசு அறிவித்த ஊரக உள்ளாட்சித்துறை அமைப்புகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வுப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார்கள்.
கொரேனா வைரஸ் தொற்று உலகெங்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிற இச்சூழ்நிலையை எதிர் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களும் மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளும் அவற்றுக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பினாலும் நாம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறோம்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப் படி மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்களும், செவிலியர்களும்,
அனைத்து துறை ஊழியர்களும் தன்னலம் பாராது பணியாற்றிதன் மூலமாக கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
தெரிவிக்கையில்… தமிழ்நாடு முதலமைச்சர்
ஆய்வுக் கூட்டங்களில் எடுத்துரைத்த அறிவுரைகளான
அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் என்று பல்வேறு நிலையிலுள்ள திட்டங்களை முழுமையாக நிறைவடைய செய்ய வேண்டுமென்றும், முடிவுற்ற பணிகளை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் புதிய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) பிரியங்கா ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்
மதுமதி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை