
விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பையும் அதன் பெருமையும் பற்றிப் பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்தியில் அத்தனை பலன்களையும் தரக்கூடியது
காசியில் ஏழு சுற்றுக்களில் உள்ள 56 விநாயகப் பெருமானின் திருநாமங்கள்:
முதல் சுற்றில் உள்ள ஆறு விநாயகப் பெருமான் திரு நாமங்கள்:
துண்டி விநாயகர்
துர்க்கை விநாயகர்
அர்க்க விநாயகர்
பிரசன்ன விநாயகர்
வீம விநாயகர்
சந்திர விநாயகர்.
இரண்டாவது சுற்றில் உள்ள 14 விநாயகர் திரு நாமங்கள்:
சித்ரூப விநாயகர்
லம்போதர விநாயகர்
கூபதந்த விநாயகர்
சலா டக விநாயகர்
குலப்பிரிய விநாயகர்
சதுர்த்தி விநாயகர்
பஞ்சமி விநாயகர்
முண்ட விநாயகர்
சமுஷித விநாயகர்
விடங்க விநாயகர்
நிச விநாயகர்
ராஜபுத்திர விநாயகர்
விநாயகர்
பிரணவ விநாயகர்
விநாயகர்
உபதாப விநாயகர்.
மூன்றாவது சுற்றில் உள்ள ஆறு விநாயகப்பெருமான் திருநாமங்கள்:
வஞ்சிர துண்ட விநாயகர்
ஏக தந்த விநாயகர்
திரிமுக விநாயகர்
பஞ்சமுக விநாயகர்
ஹோம்ப விக்கின ராஜா விநாயகர்
வரத விநாயகர்.
நான்காவது சுற்றில் உள்ள எட்டு விநாயகரின் திருநாமங்கள்:
ஏகோப்யப்பிரத விநாயகர்
சிங்க முக விநாயகர்
கூர்நிதாஷ விநாயகர்
நிப்பிரசாத விநாயகர்
சிந்தாமணி விநாயகர்
தந்த வக்கிர விநாயகர்
அபி சாண்டி விநாயகர்
ஊர்த்துவ தாண்ட முண்ட விநாயகர்.
ஐந்தாவது சுற்றில் உள்ள ஆறு விநாயகப் பெருமான் திரு நாமங்கள்:
மணிகண்ட விநாயகர்
ஆச்சார ஸ்ருஷ்டி விநாயகர் கசகர்ண விநாயகர்
கண்டா விநாயகர்
சுமங்கலி விநாயகர்
மந்திர விநாயகர்.
ஆறாவது சுற்றில் உள்ள எட்டு விநாயகப்பெருமான் திருநாமங்கள்:
மோதக விநாயகர்
சுமுக விநாயகர்
துன்முக விநாயகர்
கணபலி விநாயகர்
அபர விநாயகர்
ஆக்கின விநாயகர்
துவார விநாயகர் அவிமுக்தவிநாயகர்.
ஏழாவது சுற்றில் உள்ள ஆறு விநாயகப் பெருமான் திரு நாமங்கள்:
ஆமோதக விநாயகர்
பாகீரத விநாயகர்
அரிச்சந்திர விநாயகர்
கார்த்தி விநாயகர்
பந்து விநாயகர்
கனக விநாயகர்.
இப்புண்ணிய புராணத்தின் சிறப்பு:
இந்த மாபெரும் புராணத்தை எழுதி வைத்திருக்கும் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யமும் பொங்கி பொழியும். இதைத்தவிர பேய் பிசாசுகள், செத்த சடலங்கள், பாலகிரக தோஷம் முதலிய தீயவைகள் விநாயகர் அருளால் விலகும். இந்தப் புராணத்தை பிள்ளையார் சன்னிதியிலோ, பூஜை அறையிலோ அமர்ந்து பிரியமாய் சொல்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அவர்கள் கொலை, களவு, கள் குடித்தல், குருநிந்தை, பொய் சொல்லுதல் போன்ற தீவினைகளிலிருந்த விடுபட்டும், மேலும் அழகு, குணம், ஆயுள், குலம், சம்பத்து, செல்வம்,வித்தை, அறிவு ஆகிய எட்டு வித பயன்களும் அடைந்து இனிமையாய் வாழ்வார்கள்.
இப்புண்ணிய புராணத்தின் ,பலன்கள்:
இந்தப் புராணத்தை கேட்டால் கன்னிப்பெண் நல்ல கணவனையும், குழந்தை இல்லாதவர்கள் கேட்டால் அழகான குழந்தைச் செல்வங்களையும், வறுமையில் உள்ளவர்கள் கேட்டால் நல்ல செல்வத்தையும், கல்வியறிவு இல்லாதவன் கேட்டால் நல்ல கல்வியிலும் சிறப்பு அடைவான்.
இப்புண்ணிய புராணத்தின் பயன்கள்:
இந்தப் புராணத்தை படிப்பது கேட்பது, இறை பூஜை செய்வது, தங்கள் கையால் எழுதி தகவர்களுக்கு கொடுப்பது, மற்றவரைக் கொண்டு எழுத செய்வது ஆகிய புண்ணிய செயல்களில் ஏதாவது ஒரு புண்ணியத்தை மட்டும் விட்டுவிடாமல் பாதுகாப்பவன் எவனோ அவன் சிவனாரின் திரிசூலத்திற்கும், மாயனாரின் சக்கராயுதத்திற்கும், காலதேவனின் பாசத்திற்கும் நடுங்க மாட்டான்.
முழுமுதற்கடவுளான விநாயக பெருமானின் திருநாளான விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப்
பெருமானின் ஐம்பத்தாறு திருநாமங்களையும் போற்றி அர்ச்சித்து அவரது பேரருளை பெறுவோம்.