20/09/2020 9:58 AM

மதுரை இரண்டாம் தலைநகர்: தொழில் அமைப்பினர் கலந்தாய்வுக் கூட்டம்!

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்தாய்வில் பங்கேற்றார்,

சற்றுமுன்...

வைகை ஆற்றில் தடுப்பணை; காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு!

வாய்க்கால் சீரமைக்கும் பணியால் 1302.97 ஏக்கர் விளை நிலம் பயன் பெறவுள்ளது

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் காலமானார்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வீட்டில் சோகம். அவருடைய தாய் சுலோச்சனா சுப்ரமணியம் காலமானார்.

அதிர்ச்சி… 4வது மாடியில் இருந்து குதித்து இரு குழந்தைகளின் தாய் தற்கொலை!

சேலத்தில் அதிகாலையில் நான்காவது மாடியிலிருந்து பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்திருப்பதி திருவண்ணா மலையில் குவிந்த பக்தர்கள்!

ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு தனி வரிசை மூலமாக தரிசனம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கொரோனா தொற்று காரணமாக திருவீதி உலா நடைபெறாது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
madurai-second-capital-meeting1
madurai-second-capital-meeting1

மதுரையை தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு வர்த்தக சங்கம் தென் தமிழகத்தில் உள்ள தொழில் வர்த்தக சங்கத்தினர் கலந்தாய்வு கூட்டம் மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது,

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்தாய்வில் பங்கேற்றார், தென்மாவட்டங்களில் இருந்து தொழில் வர்த்தக சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்தனர்,

பின்பு கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர்
ஆர் பி உதயகுமார்… பொதுவாக கோரிக்கைகள் வைக்கும்போது அமைச்சர்கள் பரிசீலிக்கிறோம் என்று கூறுவது இயல்பு. அதில் ஒட்டுமொத்தமான தீர்வுகளும் உண்டு.

சுக்கு மிளகு இஞ்சி வெள்ளைப்பூண்டு இவை அனைத்தும் நமது சொத்து. இன்று அனைவரது வீட்டில் அசோக் இஞ்சி வெள்ளைப்பூண்டு அனைத்தையும் பழமையை நினைவு படுத்தி உபயோகிக்கிறோம்.

மக்களின் உணர்வு மக்களுடைய எதிர்பார்ப்பு மக்களுடைய கோரிக்கை எதிர்பார்ப்பு நம்பிக்கையுடன் வைக்கும் கோரிக்கையை கருத்தில் வைக்க வேண்டும்

இது ஒரு புதிய கோரிக்கை அல்ல 20 ஆண்டு காலங்களாக நிலுவையில் இருக்கிறது கூடிய கோரிக்கை. தகுதி இருக்கா இல்லையா?? சிலர் தகுதி இருக்கு என்று கூறுகின்றனர் சிலர் தகுதியில்லை என்று கூறுகின்றனர், அனைவருக்கும் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது.

தொழில் வர்த்தக சங்கத்தினர் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார்கள், சென்னை ஒரு தரப்பினருக்கு தலையாக உள்ளது, ஒரு தரப்பினருக்கு மிக நீண்ட தூரத்தில் உள்ளது,.. மதுரை இரண்டாம் தலைநகரம் என்ற விவாதத்தில் பலர் புரிதல் இல்லாமல் பேசுகின்றனர்..

madurai-second-capital-meeting
madurai-second-capital-meeting

சென்னை இடமில்லாமல் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு என்று விரிவடைந்து கொண்டே செல்கிறது, தலைநகரம் என்பதால் வேறு வழியில்லாமல் சென்னை விரிவடைந்து செல்கிறது, நாளை இரண்டாம் தலைநகர் ஆக வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கை அல்ல தென் மாவட்ட மக்களின் கோரிக்கை,

இரண்டாம் தலைநகரான மதுரையில் அமைய வேண்டும் என்று இல்லை மதுரைக்கு திருச்சிக்கு நடுவில் கூட வரலாம்.. சிலர் சுயநலமாக எடுக்கும் கோரிக்கையை போன்று இந்த கோரிக்கை அல்ல, நிர்வாக வசதிக்காக தான் கூடுதல் தலைநகரம் கேட்கிறோம்!

25 துறைகளில் தலைநகராக மதுரை மாறும் போது எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறுவார்கள் என்பதை உணர முடிகிறது. மதுரைக்கு சிறப்பு அந்தஸ்து இருந்தால் தான் தொழில் முதலீட்டை தர முடியும் என்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தை முழுமையாக பயன்படுத்தினால் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

கேபினட்டில் நான் கோரிக்கை வைக்கவில்லை கூறுகின்றார்கள் இடம் எது என்பது முக்கியமில்லை கருத்து முக்கியம் முதலில் நான் சாமானியன் பிறகுதான் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் வாக்காளராக விளையாத கருத்தை தெரிவிக்கிறேன்..

அடுத்த தலைமுறையினர் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்.. எனது கோரிக்கை விவாதப் பொருளாக இருக்கலாம்,ஆனால் நோக்கம் வளர்ச்சி பற்றியது அதைத்தவிர வேறு உள்நோக்கம் இல்லை..

ஒரு நாள் ஒரு வாரம் என்றெல்லாம் இந்த ஆட்சி ஆருடம் கொடுத்தார்கள் இப்போது ஆட்சி நிலைத்து சபாஷ் இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறது..

கொடுக்கிற சாமி எங்கு இருக்கிறதோ அங்கு தான் கூட்டம் வரும்,அதனால் தான் எத்தனை நாள் மனதில் இருந்த கோரிக்கையாக வைத்துள்ளது, ஏன் வரத்தைக் கேட்டு இருக்கிறார்கள் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை!

மதுரை இரண்டாம் தலைநகராக வரும்போது மாவட்டங்களில் எண்ணிக்கையில் எல்லை பிரிக்க படுவதில்லை, சென்னைக்கு சேர்த்து தலைநகராக மதுரை இருக்கும் மதுரைக்கு சேர்த்து தலைநகராக சென்னை இருக்கும் நிர்வாகம் மட்டுமே பிரிக்கப்படும்

அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபையில் தான் இதை அறிவிக்க முடியும் என்பது எனக்கும் தெரியும். மதுரை-திருச்சி என்பது விவாதம் அல்ல ஆற்றல் சார்ந்த மனித வளம் தென் தமிழகத்தில் தான் உள்ளது.

கோரிக்கையை வைக்கும்போது பல்வேறு சவால்கள் வந்துதான் தீரும், அதைக் கடந்து தான் சாதிக்க வேண்டும். பதவியை முன்வைத்த கோரிக்கை அல்ல, பதவியை விட மதுரை வளர்ச்சி தான் முக்கியம்.

கோரிக்கையை வைத்து விட்டு பயந்து ஓட முடியாது, எதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன்.. வொர்க் பிரம் ஹோம்(work from home) போல work from மதுரை என்றுதான் கோரிக்கை வைக்கிறோம். சென்னையில் இடம் நெருக்கடியில் பணியாற்றாமல் மதுரையில் காற்றோட்டமாக பணியாற்றுங்கள் என்று தான் கோரிக்கை வைக்கிறோம்.

கோரிக்கை வைப்பதை கூட ஏன்‌ வைக்கிறீர்கள் என கேட்கிறார்கள். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை வைக்கிறார் என்றால் அது அவருக்கு வாக்களித்த மக்கள் சார்பாக வைக்கும் கோரிக்கை. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. இதை வைத்து மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே தேவையில்லாத பிரச்சனையை உருவாக்க வேண்டாம்.. – என்று பேசினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

அடிமை வரலாறுகள் திருத்தப் பட்டாக வேண்டும்!

நாடு முழுவதும் வேத ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக் கழகங்கள் துவக்கப்படுவதும் மிக அவசியமே. அதனைச் செய்வதற்கு

சமையல் புதிது.. :

ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

வெங்காய பீர்க்கங்காய் மசியல் தேவையான பொருட்கள் வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »