
இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் : நான்காவது டி20 போட்டி
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (இருபது ஓவர் முடிவில் 191/5, ரிஷப் பந்த் 44, ரோஹித் ஷர்மா 33, சஞ்சு சாம்சன் 30, மெக்காய், அல்சாரி இருவரும் தலா 2 விக்கட்டுகள்) மே.இ. தீவுகள் அணியை (19.2 ஓவர்களி 132 ஆல் அவுட், நிக்கோலஸ் பூரன் 24, ரோவ்மன் போவல் 24, அர்ஷதீப் 3 விக்கட், ஆவேஷ் கான், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கட்) 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த டி20 போட்டி அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. விசா கிடைக்காததால் இரு அணிகளும் அமெரிக்கா வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவழியாக விசா கிடைத்து இரு அணிகளும் வந்தன. இன்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் மழைபெய்ததால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது.
டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணி இரண்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 65 ரன் எடுத்தது. ரோஹித் (33), சூர்யகுமார் யாதவ் (24), தீபக் ஹூடா (21), பந்த் (44), சஞ்சு சாம்சன் (30), அக்சர் படேல் (20) என அனைத்து இந்திய வீரர்களும் சிறப்பாக ஆடினர். இந்தியா 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 191 ரன் எடுத்தது.
மேற்கு இந்தியத் தீவுகளின் தொடக்கம் நன்றாக இருந்தது. பவர்ப்ளேயில் அந்த அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 61 ரன் எடுத்திருந்தது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மே.இ. தீவுகள் அணியின் வீரர்கள் 19.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 132 ரன் மட்டுமே அடித்தனர்.
இந்தியா இந்த வெற்றியின் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நாளை இதே மைதானத்தில் ஐந்தாவது போட்டி நடைபெறும். ஆவேஷ்கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.