கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வரும் வெள்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது என்று ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா மனிதநேய ஒருங்கிணைப்பு அமைப்பு தெரிவிக்கையில், கென்யாவின் வடக்கு பகுதியில் கடந்த மார்ச் மாதம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். 8 ஆயிரத்து 450 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளது என்றும் கூறியுள்ளது.