பிரேசிலில் 26 மாடி கட்டிடத்தில் தீ

Published:

Brazil Firemay02 - 2026

பிரேசிலின் சாவ் பாலோ நகரில் உள்ள 26 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பலியாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பெரியளவிலான தீ விபத்தை தொடர்ந்து, 57 தீயணைப்பு வாகனங்களில் 160 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில், தீ உடனடியாக அனைத்து மாடிகளுக்கும் பரவியது என்றும், அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த பலர் வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறியுள்ளார்.

இந்த தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காணவில்லை போனவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை

Related articles

Recent articles

spot_img