அக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு!

அடடே... அப்படியா? கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
tamilnadu secretariat - 2026

அக்.1 முதல் சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு மாணவர்கள் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப் படுவதாக தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் என்றும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே செயல்படும் பள்ளிகளுக்கு அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் செல்லலாம். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.