அவரை பார்த்தா.. ராஜசேகர ரெட்டி ஞாபகம் வருது: சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
silukkur-dr-soundarajan
silukkur-dr-soundarajan

அவரைப் பார்த்தால் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி ஞாபகம் வந்தார்…. சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்.

புதன்கிழமை திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி பிரம்மோற்சவ விழாவில் பங்குகொண்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பஞ்சகச்ச வேட்டி கட்டி நெற்றியில் திருநாமத்தோடு மங்கள வாத்தியங்கள் வேத மந்திர உச்சாடனங்கள் இடையில் ஊர்வலமாக சென்று ஸ்ரீ பாலாஜிக்கு அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்த செய்தி தெரிந்ததே.

இது தொடர்பாக அவர் நடந்து கொண்ட விதமும் அவருடைய தோற்றமும் அப்படியே மறைந்த முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி போலவே இருந்தது என்று சிலுக்கூரு பாலாஜி முதன்மை அர்ச்சகர் டாக்டர் எம்வி சௌந்தரராஜன் கூறினார்.

முதல்வர் ஜெகனை பார்த்தால் அவருடைய தந்தையார் ஞாபகம் வந்தார் என்று கூறினார்.

இதுகுறித்து வியாழக்கிழமை டுவிட்டரில் ஒரு வீடியோவை சௌந்தரராஜன் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் ஒய்எஸ்ஆர் இன்று இல்லையே என்று எண்ணினேன்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

ஆனால் அவர் எங்கும் போகவில்லை. அவர் இங்கேயே இருக்கிறார் என்பது இப்போது ஜெகன் வடிவத்தில் உலகமெங்கும் பார்க்கின்றது. உலக அளவில் உங்களுக்கு வாழ்த்துக்கள் வந்து சேர்ந்துள்ளன.

வியாழக்கிழமை கூட நீங்கள் திருமலையில் இருந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி. தார்மீகப் பரிஷத் அமலுக்கு வர வேண்டும். அதற்கு உங்கள் உதவி தேவை என்று சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.