திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உடன் பணியாற்றும் எஸ்ஐ தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என பெண் போலீஸ் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில், புகார் கொடுத்த பெண்ணும் உடந்தையாக இருந்தது, சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளில் தெரியவந்துள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பாலகிருஷ்ணன். 54 வயதான இவர் கடந்த 12ஆம் தேதி இரவு பணியில் இருந்த போது, காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த 34 வயதாகும் முதல்நிலை காவலர் சசிகலாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு யதேச்சையாக வந்த உளவுத்துறை தனிப்பிரிவு ஏட்டு கேசவனிடம் சசிகலா புகார் தெரிவித்துள்ளார். தனிப்பிரிவு ஏட்டு சசிகலாவின் புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார்.
இப்படி, பாலசுப்ரமணியன் இரவு பணியின் போது அங்கு பணியாற்றும் பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எஸ்பி அலுவலகத்துக்கு ஒரு புகார் சென்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.
உடன் பணிபுரியும் பெண் போலீஸின் புகாரால் தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என்பதை அறிந்த எஸ்ஐ, “நான் அந்தப் பெண் போலீஸை பாலியல் தொந்தரவு செய்யவில்லை! நாங்கள் இருவரும் எப்போதும் இப்படித்தானே இருப்போம். அதென்ன என் மீது மட்டும் நடவடிக்கை என்று கேட்டு அந்த எஸ்ஐ, பெண் போலீஸ் மீதும் புகார் அளித்தார்.
இதனால் குழப்பம் அடைந்த எஸ்.பி., இது குறித்து விசாரிக்குமாறு ஜீயபுரம் டிஎஸ்பி ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். மேலும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யுமாறும் கூறப் பட்டது. இதை அடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
இரவுப் பணியின் போது பெண் போலீஸின் அருகில் சென்ற பாலசுப்பிரமணியன் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை அவரிடம் சென்று அது போன்ற சீண்டல்களில் ஈடுபட, அதற்கு அந்தப் பெண் போலீஸ் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் சகஜமாகவே இருந்துள்ளார்! இந்த சிசிடிவி காட்சியில் அந்த எஸ்ஐ.,க்கு பெண் போலீஸ் ஒத்துழைப்பது போலவே தெரியவந்தது.
முன்னதாக இந்த சம்பவத்தின் போது காவல் நிலைய வளாகத்திற்கு பைக்கில் வந்த உளவுத்துறை காவலர் வரும் போது, வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தை பார்த்து இருவரும் ஒதுங்கி கொண்டனர். பின்னர் எஸ்ஐ வெளியே சென்றதும் உளவுத்துறை காவலரிடம் அந்த பெண் போலீஸ் பொய்யாக புகார் அளித்தது தெரியவந்தது. இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட இருவருமே திருமணமானவர்கள். இருவருக்குமே குழந்தைகள் உள்ளனர்!