மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
aiims - 2026
File Picture – AIIMS

புது தில்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவலைப் பரிமாறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மதுரை அருகே தோப்பூரில் ரூ.1258 கோடி மதிப்பில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று கூறியுள்ளார். இதை அடுத்து, விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்படும் எனக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.