
கோவை மாவட்டத்தில் டூவீலர் ஓட்டி வந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப் 10 ஆம் தேதி டூவீலரில் வந்த கொண்டிருந்த போது அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே வந்தபோது காவலர் ஒருவர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளார்.
பதற்றமான அந்தப் பெண் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். அவரை நெருங்கிய அந்தக் காவலர் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அச்சமடைந்த பெண் அருகில் உள்ள ஒரு பேன்ஸி ஸ்டோருக்கு சென்று தனது கணவருக்குத் தகவல் கூறியுள்ளார்.

விடாமல் அந்தக் கடைக்கும் வந்திருக்கிறார் அந்த காவலர் அத்துடன் அவரிடம் வரம்பு மீறிப் பேசியும் உள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் வந்துவிட அவர்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
விசாரணையில் அந்த காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரின் டிரைவர் என்பது தெரியவர அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.