
சென்னை: பெண் தொழில் அதிபர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில், குடும்பத்துடன் வசித்து வந்தவர் ரீட்டா லங்காலிங்கம். கோயம்பேட்டில் உள்ள லேன்சன் டொயோட்டா கார் ஷோரூம் நிறுவன இணை இயக்குனராக ரீட்டா இருந்தார். இதில் இவரது கணவர் இயக்குனராக உள்ளார்

காலையில் வெகு நேரமாகியும் வெளியே ரீட்டா வராததைக் கண்ட அவரது வீட்டு சூப்பர்வைசர் ஏசுபாதம் சந்தேகம் அடைந்து ரிட்டாவின் அறை ஜன்னலில் எட்டி பார்த்துள்ளார். அப்போது, ரீட்டா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். கதவை திறக்கலாம் என்றால், ரீட்டா உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டிருந்தார். இதையடுத்து அலறி துடித்த ஏசுபாதம்
உடனடியாக நுங்கம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த அவர்கள், சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
ரீட்டா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. தொழில் ரீதியாக கணவருடன் ரீட்டாவுக்கு பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மற்றொரு பக்கம், தன் ஆபீசில் உள்ள எல்லா மேனேஜர்களிடமும் ரீட்டா வாக்குவாதம் செய்வாராம், இதை கணவர் தட்டி கேட்க போய், அதனால் தம்பதிக்குள்ளும் சண்டை வந்ததாக கூறுகிறார்கள். நேற்றிரவு கூட இது சம்பந்தமாக இருவருக்குள்ளும் தகராறு நடந்துள்ளது.
இந்த சண்டையில் கணவர் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்றிருக்கிறார். இரவு முழுவதும் அவர் திரும்பாத நிலையில் அந்த மன வருத்ததில் ரீட்டா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. pஎனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் ரீட்டா எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று உறுதியாக தெரியவரும் என்கிறார்கள் காவல்துறையினர்.