கொரோனா தீர்த்திட வா.. வா வேலவா!

கவிதைகள்
vayalur murugan
vayalur murugan

வைகாசி விசாகத் திருநாளை ஒட்டி கொரோனா நோய் தீர்க்க வேண்டி முருகப் பெருமானைப் பிரார்த்திக்கும் கவிதை…

வா வா வேலவா
– பத்மன் –

கொற்றவை பெற்றவனே உற்றவை தீர்த்திட வா
கதறுதல் கேட்கலையோ உதறுதல் சரிதானோ?
நஞ்சிலும் கொடியவிஷம் நெஞ்சினில் குடிபுகுதே!
வெஞ்சமர் வெல்பவனே தஞ்சமெனப் புகுந்தோம்.

வஞ்சினம் மிகக்கொண்ட செஞ்சீனக் கயவனவன்
விஞ்சிய விஷம்படைத்து வீதியில் உலவவிட்டான்
காற்றினில் பரவிடுதே காசமும் விரவிடுதே
மூக்கினில் தொற்றிடுதே மூச்சையும் நிறுத்திடுதே!

அவுணரை வதைத்திடவே அவனியில் உதித்தவனே
அவதியை விரட்டிடவே சடுதியில் வாராயோ?
அசுரரை வென்றவனே அச்சம் கொன்றிட வா!
அமரரைக் காத்தவனே அனைவரைத் தேற்றிடவா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.