
- மீ. விசுவநாதன்
அங்கே பறக்கிற பூச்சிகளும்
அருகில் நடக்கிற மாடுகளும்
தங்கள் உணவினைப் பிறருக்காய்
தந்து மகிழ்கிற உயிரினமும்
உங்கள் நினைவிலே யாரென்றே
ஊரார் கேட்கிற போதினிலே
எங்கள் ராமனின் உருவென்றே
இன்பம் பொங்கிடச் சொல்வோமே!
ஆத்து மணல்தனில் உருண்டங்கே
அணிலும் செய்ததோர் தொண்டைப்போல்
காத்த டிக்கிற திசையெல்லாம்
காலம் ராமனின் புகழ்பாடும்!
நேத்து இன்றென நாளையென
நிலைத்து வாழ்கிற தத்துவமாம்
ஆத்மா ராமனின் திருவடியில்
அன்புத் தாமரை உளம்தந்தோம்!.
(17.04.2024 09.47 am)
(இன்று ஸ்ரீ ராம நவமித் திருவிழா)