பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? – 1
அன்பான வாக்காள பெருமக்களே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இனிய வணக்கங்கள்.
சுதந்திர பாரதத்தின் வரலாற்றிலேயே உலகை திரும்பி பார்க்க வைத்த தசாப்தம், நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசின் சதாப்தம் தான்.
எவை எல்லாம் சாத்தியமற்றது என நினைத்தார்களோ அவற்றை எல்லாம் சாதித்து ஆக்கியிருக்கிறது.
கனவாக இருந்த பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியது இந்த அரசு.
முத்தலாக் கொடுமையிலிருந்து சிறுபான்மையின பெண்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கிய 370 பிரிவை யாராலும் தொட முடியாது என மார்தட்டி வந்த நிலையில் அதனை நீக்கி இது ஒரே தேசம் என உறுதிபட உணர்த்தியது இந்த அரசு. இன்று காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இல்லை. ஏன் நாடு முழுவதுமே குண்டுவெடிப்புகளில் இல்லை.
500 ஆண்டு கனவான அயோத்தியில் ராமருக்கு ஆலயம் சுமுகமாக நிறுவப்பட்டுள்ளது
நம் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எல்லாம் எப்படி சாத்தியப்படும் என்று எள்ளி நகையாடியவர்களுக்கு மத்தியில் பட்டி தொட்டி எங்கும் அதனை எடுத்து சென்று டிஜிட்டல் புரட்சியில் சாதனை படைத்துள்ளது இந்த அரசு.
இதனால் பணப் பரிமாற்றத்தில் ஒழுக்கம் ஏற்பட்டுள்ளது. 51 சதவிகித ஏழை இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டு, சுரண்டலுக்கு வழியில்லாமல் பயனாளிகளுக்கு பணம் போய்ச் சேருகிறது.
பாரதப் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக இந்தியாவின் அங்கீகாரம் உலகளவில் மிகவும் உயர்ந்துள்ளது. பாம்பாட்டிகளின் தேசம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் தலைமையை இன்று உலகின் வலிமையான நாடுகள் எதிர்பார்க்கின்றன. தனது பொருளாதார விஞ்ஞான வளர்ச்சியால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா.
2014 இல் நொறுங்கி இருந்த நமது பொருளாதாரம் மீட்கப்பட்டு உலகின் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. விரைவில் மூன்றாவது பொருளாதாரமாக நமது தேசத்தை உருவாக்கி வருகிறது இந்த அரசு.
முன்னே எப்போதும் இல்லாத அளவில் தேசிய மற்றும் கிராமப்புற சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வர்த்தகம் ஓங்கி உயர்ந்துள்ளது. பத்து ஆண்டுகளில் சாலை அமைத்தலின் வேகம் இரண்டு முதல் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.
பத்து ஆண்டுகளில் விமான நிலைய எண்ணிக்கை 74ல் இருந்து 149 ஆக உயர்ந்துள்ளது.
சிறப்புமிக்க ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்கள். உலக தரத்தில் வந்தே பாரத் ரயில் சேவை.
ஊழல்களே தலைப்புச் செய்தியாக இருந்த காலம் மாறி இன்று வளர்ச்சியே தலைப்பு செய்தி என மாற்றியுள்ளது இந்த அரசு.
எளிதில் தொழில் துவங்க வழிவகை செய்வதில் இரட்டிப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது இந்த அரசு. 41,000 தேவையற்ற சட்ட விதிகள் நீக்கப்பட்டு, ஐந்து சதவீதம் வரிச் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
54 லட்சத்துக்கு அதிகமான சாலைய�ோர வியாபாரிகளுக்கு எளிய கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுத�ோறும் ரூபாய் 6 ஆயிரம் வழங்கி ஊக்கமளித்து வருகிறது இந்த அரசு. 49 கோடி விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர்.
18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு 13 ஆயிரம் கோடியில் விஸ்வகர்மா கடன் திட்டம்.
ராணுவ வீரர்களுக்கு ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்்ஷன் எனும் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது..
- ஏழைகளுக்கான வீடு,
- அனைவருக்குமான வங்கி கணக்கு,
- அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர்,
- அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை,
- பெண்களுக்கு இலவச எரிவாயு திட்டம்,
- ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்,
- என சமூக புரட்சியில் முன் நிற்கிறது இந்த அரசு.
- இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி,
- தொழில் துவங்க முத்ரா கடன்,
- சுத்தமான எரிசக்திக்காக சூரிய மின் சக்தி திட்டம்,
- பொது மக்களுக்கு எளிய பிரீமியம் தொகையில் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு,
- பெண் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்புக்கு,
- செல்வமகள் சேமிப்பு திட்டம் என மக்கள் நலனின் சாதனை படைத்திருக்கிறது.
சிறந்த கொரோனா மேலாண்மையில் உலகின் பாராட்டை பெற்றது. சொந்த நாட்டில் 210 கோடி தடுப்பூசிகள் 110 உலக நாடுகளுக்கு இலவச தடுப்பூசிகள் என உலகைக் காக்கும் நாடாக உயர்ந்தது.
இவ்வாறு அனைத்து துறைகளிலும் தேசத்தை சுயசார்பு தேசமாக மாற்றுவதில் ஒரு புதிய பாதையை நமக்குக் காட்டியுள்ளது நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு.
எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
வெல்லட்டும் பாரத அன்னை!
ஜெய் ஹிந்த்!
வந்தே மாதரம்!
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ பிரசார உரையில் இருந்து…
அன்பான வாக்காள பெருமக்களே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இனிய வணக்கங்கள்.
மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழகத்துக்கு என்ன செய்தது என்பதை வாக்காளர்களுக்கு சுருக்கமாக இங்கே பதிவிடுகிறோம்.
கடந்த பத்து ஆண்டுகளில், இன்றைய மத்திய அரசால் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிலான நிதி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது 2004 – 14 காங் – திமுக கூட்டணி காலகட்டத்தில் பெறப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம்.
முந்தைய ஆட்சி காலங்களை விட தமிழகத்தின் உள்கட்டமைப்பிற்கு அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது மோடி அரசு.
3536 கிலோ மீட்டருக்கான தேசிய நெநெடுஞ்சாலைக்சாலைக்சாலைக்சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் புதியதாக 3719 கிலோ மீட்டருக்கு கிராம சாலைகள் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களை புதுப்பிக்க ரூபாய் 3500 கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்திற்காக ரூபாய் 1260 கோடி.
கோவையில் தொழிலாளர் நல மருத்துவமனைக்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே எங்கும் இல்லாமல் 14 மாவட்ட தலைநகரங்களில் மருத்துவக் கல்லூரிகள்.
ஒட்டு மொத்த நாட்டிலேயே இரண்டு பாதுகாப்பு வழித்தடங்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்று தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ளது. அது தான் திருச்சி கோவை சென்னை பாதுகாப்பு தளவாட உற்பத்தி வழித்தடம்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியாக 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இணைத்துள்ளது மத்திய அரசு.
49 லட்சம் விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் பிரதம மந்திரி விவசாய ஊக்க உதவி திட்டத்தின் மூலம் ஆண்டுத�ோறும் ரூபாய் 6000 செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 14700 கோடி வழங்கப்பட்டுள்ளது.
61 லட்சம் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5 லட்சம் வரை செலவு செய்து கொள்ளும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் 52 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர்.
திறந்தவெளி மலம் கழிப்பதை தடுக்கவும், சுகாதாரத்தைப் பேணி காக்கவும் தமிழ்நாட்டில் சுமார் 62 லட்சம் கழிவறைகளை இந்த அரசு கட்டிக் கொடுத்துள்ளது.
இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 36 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜன்தன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1 கோடியே 43 லட்சம் மக்களுக்கு புதிதாக வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளன. எனவே சுரண்டலுக்கு வழியின்றி பயனாளிகள் நேரடியாக பணம் பெறுகிறார்கள்.
இலவச ரேஷன் அரிசியால் தமிழகத்தில் 3.64 கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள்.
எட்டரை கோடி ஜனத்தொகை உள்ள தமிழகத்தில், ஒரு நபருக்கு இரண்டு முறை என 12 கோடியே 75 லட்சம் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக போடப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி வருகிறது மோடி அரசு.
நிரந்தரமாக முடக்க திட்டமிட்ட ஜல்லிக்கட்டை மீட்டு தந்தது மோடியின் ஆட்சி.
முந்தைய ஆட்சிக்காலத்தில் பக்கத்து நாட்டுக்கு தாரைவாக்கப்பட்ட கட்ச தீவை மீட்கவும் போராடி வருகிறது இந்த மத்திய அரசு.
பாரத பிரதமர், தான் செல்கின்ற இடம் எல்லாம் தமிழையும் தமிழின் பெருமை பற்றியும் விவரித்து வருகிறார். தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத பிரதமரின் தமிழ் சேவை தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் அடையாளமான செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவியதன் மூலம் தமிழர் கலாச்சாரத்தை உலகறிய வைத்துள்ளது மோடி அரசு.
காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நடத்தி தமிழர்களின் தொன்மையை பறை சாற்றி இந்திய ஒற்றுமையை உறுதிப்படுத்தி வருகிறது இன்றைய மத்திய அரசு.
மோடியின் மத்திய அரசால் 18 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் திருவள்ளுவரின் படைப்புகளும் பாரதியின் படைப்புகளும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
காசி இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பெயரில் ஓர் இருக்கையை அமைத்துள்ளது இந்த அரசு.
தமிழகத்தில் நிலவும் போதைப் பழக்கத்தில் இருந்து மாநிலத்தை மீட்க சபதம் எடுத்துள்ளது மோடி அரசு.
அதுமட்டுமல்ல மாநிலத்தில் இயற்கை வளங்களை உறிஞ்சுபவர்களின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்க சபதம் எடுத்துள்ளன பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள்.
எனவே, தமிழர் கலாச்சாரம், பண்பாடு காத்திட, தமிழர் வாழ்வு செழித்திட, பாஜக வேட்பாளர்களுக்கு தாமரைச் சின்னத்திலும், பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும், அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும், பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களித்து மீண்டும் மோடி ஆட்சி மலர்ந்திட உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
பாரத் மாதா கி ஜெய்!
ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்!
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ பிரசார உரையில் இருந்து…