ரன்வீர்சிங்-தீபிகா திருமணத்திற்கு சுவிட்சர்லாந்து அழைப்பு

சினி நியூஸ் சினிமா

ranvir deepika - 2026
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மற்றும் தீபிகா படுகோனே கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில்  ரன்வீர் சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் இந்திய சுற்றுலா பிரதிநிதியாக இருப்பதால் அவரது திருமணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டு சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று ரன்வீர்-தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக இருவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதத்துக்குள் இந்த திருமணம் முடிந்துவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.