தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
நல்ல வாக்கு சொன்ன காங்கிரஸ் உறுப்பினர் வாயில் சர்க்கரை போடுகிறேன் என்கிறார் மோதிஜி
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் நமது சில நண்பர்களுக்கு, நான் இதயப்பூர்வமான என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஏனென்றால் முடிவுகள் வெளியானதிலிருந்து, நம்முடைய ஒரு சகா என்ற முறையிலே நான்…….. பார்த்துக் கொண்டிருந்தேன் அவருடைய கட்சி அவரை ஆதரிக்கவில்லை தான்
ஆனால் தனியாளாகக் கொடி பிடித்து ஓடிக் கொண்டிருந்தார். நான் ஒன்று கூறுகிறேன் யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்கள் வாயில் சர்க்கரை தான் போட வேண்டும். இதை நான் ஏன் கூறுகிறேன்?
ஏனென்றால் அவர் மீண்டும் மீண்டும் ஒன்றைக் கூறினார், 3இல் ஒரு பங்கு அரசாங்கம். இதை விட சத்தியமான வாக்கு வேறு என்னவாக இருக்க முடியும்? எங்களுடைய பத்தாண்டுகள் நிறைவாகி இருக்கின்றன. இன்னும் 20 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது.
3இல் ஒரு பங்கு தானே ஆகியிருக்கிறது!!! 3இல் ஒரு பங்கு ஆகியிருக்கிறது.
3இல் இரு பங்கு பாக்கியிருக்கிறது. அந்த வகையினிலே, அவருடைய இந்த வருங்கால கணிப்பிற்கு, நல்ல வாக்கிற்கு அவர் வாயில் சர்க்கரையைப் போடுகிறேன்.