மக்கள் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் எதிலும் ஈடுபட வேண்டாம்: தூத்துக்குடி ஆட்சியர்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sandeep nanduri - 2026

சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டிருக்கிறார் .

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும்  என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்கள்மத்தியில்கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறையினருடன் ஆலோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என்று ஆட்சியர் உறுதி கூறியுள்ளார்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவு கிடைக்கப் பெற்ற சில நிமிடங்களில் சேலம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.