ஈழத் தமிழரை கொன்ற சோனியாவே திரும்பிப் போ#GOBACKSONIYA

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
IMG 20181215 WA0060 - 2026

ஈழத் தமிழர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை ஆவதற்கு காரணமான காங்கிரஸ் தலைவியாக இருந்த சோனியாவே திரும்பிப் போ என்ற கோஷங்கள் இன்று டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது

திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிறு நாளை நடைபெற உள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு சோனியா காந்தியை அழைத்துள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் திடீரென பங்கேற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கோ பேக் சோனியா சோனியா திரும்பிப்போ என்ற கோஷங்கள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகிவருகின்றன

முன்னர் சென்னைக்கு அருகே திருவிடவெந்தை பகுதியில் நடைபெற்ற ராணுவ கண்காட்சிக்கு பார்வையிட வந்த பிரதமர் மோடியை கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக் மூலம் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட திமுகவினருக்கு எதிராக தற்போது இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது

காவிரிப் பிரச்சினையை மையமாக வைத்து நடைபெற்ற போராட்டங்களின் போது கர்நாடக அரசை எதுவும் சொல்லாமல் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்த திமுக, மத்திய அரசை விமர்சித்து மோடியை கடுமையாக எதிர்த்து கோபக் மோடி என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்துகளை பரப்ப விட்டது

ஆனால் அதன்பின்னர் ட்விட்டரில் ஹிந்து இயக்கங்கள் மற்றும் மோடி ஆதரவாளர்கள் அடிக்கடி திமுகவையும் திமுக வின் செயல்பாடுகளையும் விமர்சிப்பதற்கு அதனை பயன்படுத்திக் கொண்டனர்.

திமுக குறித்த விமர்சனங்கள் டிவிட்டரில் அதிகமாகி வருகின்றன. அதற்கு காரணம் அப்போது திமுக மேற்கொண்ட மோடி எதிர்ப்பு பிரச்சாரம்தான்.

மேலும் திமுக 200 ரூபாய்க்கு பதிவுகளை எழுத வைத்துக் கொண்டிருக்கும் கட்சி என்பதை குறிப்பிட்டு அவ்வப்போது கேலியும் கிண்டலும் சமூக வலைதளங்களில் பரவலாக முன்வைக்கப்படும்

தற்போது திமுகவை விமர்சித்து லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமான காங்கிரஸ் தலைவி சோனியாவை டில்லி வரை சென்று நேரில் அழைத்து கருணாநிதி சிலை திறப்புக்கு வருமாறு ஏற்பாடு செய்த ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோபேக்சோனியா என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

4 thoughts on “ஈழத் தமிழரை கொன்ற சோனியாவே திரும்பிப் போ#GOBACKSONIYA”

  1. திருமதி.சோனியாவின் “கைப்பாவை” மன்மோகன்சிங் தலைமையில், கருணாநிதி ஆதரித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்குக் கொடுத்து, விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இனப்படுகொலைக்கு துணைபோனதை மன்னிக்கமுடியாது. திருமதி.சோனியா,தமிழகம் வரத் தகுதியில்லாத தலைவரே.

  2. இந்த பொய் பிரச்சாரத்தின் பின்னணி என்ன?பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

  3. எது பொய்.. ஈழ தமிழர் விவகாரத்த்தில் சோனியாவுக்கு பங்கு இல்லையா? சோனியாவை மீறி காங்கிரஸ் ஆட்சி நடத்தியதா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.