ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சற்றுமுன் நெல்லை

modi open - 2026

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

ஏப்ரல் 2-ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மார்ச் 27 புதன்கிழமை மதியம் 02.00மணி அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வருகை தரவுள்ளார் என்று பாஜக.,வினர் கூறினர்.

நாளை பூத் திறந்து வைத்து அதை தொடர்ந்து மதியம் 03.00மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் வெற்றி வேட்பாளர் டாக்டர் K.கிருஷ்ணசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் என்று தென்காசி பாஜக.,வினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.